சென்னையில் பெய்த மழை மக்களை மோசமான பாதிப்புக்குத் தள்ளிய நிலையில், தொழிற்துறையினர் மத்தியில் பல புதிய விவாதத்தை உருவாக்கியது. இதில் முக்கியமாக சென்னையில் தொடர்ந்து வர்த்தகம் செய்யலாமா அல்லது வேறு நகரங்களுக்கு இடம்பெயரலாமா, தமிழ்நாட்டுக்கு 2வது தலைநகரத்தை உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டது.   ஆனால் இந்தியாவில் பெரும்பாலான பெரு நகரங்களில் இயற்கை சீற்றத்தின் போதும் அதிகளவிலான பாதிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று, உதாரணமாக இந்த வருடத்தின் துவக்கத்தில் பெங்களூரில் பெய்த மழை, சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த மழையில் பல ஐடி பார்க் மழை நீரில் மிதந்தது.  

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சென்னையைத் தாண்டி பல நகரங்களில் சிப்காட், டைடல் பார்க் கட்டப்பட்டு வரும் காரணத்தால் சென்னையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை இனி இருக்காது. எனவே முதலீட்டு சந்தையும், வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் எனத் தொழிற்துறையினர் நம்புகின்றனர்.

அரசு, மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் பல்வேறு சிப்காட்டுக்கு மத்தியில் பொள்ளாச்சி, தேனி, தூத்துக்குடி, சூளகிரி, தர்மபுரி, கோயம்புத்தூரில் 2 டிபென்ஸ் பார்க், காட்பாடி போன்ற பல இடத்தில் புதிய சிப்காட் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாகப் பெரம்பலூர் மற்றும் திண்டிவனம் சிப்காட் முழுமையாகக் கட்டி முடிப்பதற்குள் மொத்த இடத்தையும் தைவான் நாட்டின் தோல் மற்றும் காலணி உற்பத்தியாளர்கள் தேர்வு செய்தனர். இதேபோல் ஓசூர் முதல் தர்மபுரி வரையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனங்கள் போட்டிப்போட்டு நிலத்தைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது. இதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி சிப்காட் பகுதியில் ஹைட்ரஜென், புதுப்பிக்கத்தக்க எனர்ஜி, பர்னிச்சர் துறை நிறுவனங்கள் தேர்வு செய்கிறது. தற்போது அதிகம் எதிர்பார்ப்பு இருப்பது மணப்பாறை சிப்காட்-ல் டாடா குழுமத்தின் முதலீடும், துவங்கப்படும் தொழில்களும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தேனி சிப்காட் பகுதியில் விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தேர்வு செய்கிறது. பூ சென் – 2,300 கோடிகள் கள்ளக்குறிச்சி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது ஹாங் ஃபூ – 1,000 கோடி ரூபாயை ராணிப்பேட்டை சிப்காட் முதலீடு செய்ய உள்ளது தாமரை காலணி – 500 கோடி ரூபாயை திண்டிவனம் சிப்காட் முதலீடு செய்ய உள்ளது KICL – 500 கோடி ரூபாயை பெரம்பலூர் சிப்காட் முதலீடு செய்ய உள்ளது பெட்ரோனாஸ் – 34,000 கோடி ரூபாயை தூத்துக்குடியில் சிப்காட் முதலீடு செய்ய உள்ளது சைலோனெடிக்ஸ் – 700 கோடி ரூபாயை தூத்துக்குடி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது ACME – 52,000 கோடி ரூபாயை தூத்துக்குடி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது டாடா சோலார் PV ஆலை – 4,000 கோடி ரூபாயை திருநெல்வேலி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது இதேபோல் ஐடி சேவை துறைக்காகவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காகவும் டைடல் பார்க், எல்காட் ஐடி பார்க், நியோ டைடல் பார்க் ஆகியவை பெரு நகரங்கள் முதல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களிலும் கட்டப்பட்டு வருகிறது.

இதனால் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சென்னையை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்காமல் தொடர்ந்து மாநிலத்தின் பிற மாவட்டத்திலும் முதலீடு செய்யலாம்.

எனவே நமது மதுக்கூர் இளைங்கர் இந்த வாய்புகளை பயன்படுத்திக்கொள்ள தன்னை தாயார் படுத்திக்கொள்ளவேண்டும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.