எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 2021 ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இன்ஜினியர் பிரேம் நசீர்அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் (Voucher No 001) பணம் முன் பணமாக கொடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய ஜாமியா மஸ்ஜித் கட்டுமான பணி நிறைவின் நிலையை அடைய உள்ளது.
பள்ளியில் உபிவிசி கதவுகள் மற்றும் எஸ் எஸ் ஸ்டீல் கைபிடிகள் குறிப்பிட்ட நிதி, காலகட்டத்தில் ஜனாப் செளகத் -ஆல் கிங்ஸ் டாப்பண்ட கிளாஸ் எக்ஸ்பர்ட் பட்டுக்கோட்டை அவர்களால் முடிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளியின் உள் கண்ணாடி மற்றும் எஸ்எஸ்எல் கதவுகள் அமைக்க பணி செய்ய அவர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
நமது ஊரை சார்ந்த வளரும் இளம் இன்ஜினியர் ஜனாப் வாசிம் அவர்கள் கழிவறையை திட்டமிட்ட நிதி கால வரம்புக்குள் செய்து வருகின்ற காரணத்தால் ஒது செய்யும் கட்டிடம் மற்றும் பழைய அகல் செல்வதற்கான படிகள் கட்டுவதற்கான வேலைகள் செய்ய அவர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஜினியர் பிரேம் நசீம் அவர்கள் பெயிண்ட் வேலைகளை முடித்து முன் வாசல்களை நிலை நிறுத்த மெருகூட்டும் பணிகளை தனது கட்டுப்பாட்டில் இன்ஜினியரிங் கார்த்திக் மூலம் செய்து வருகின்றார்
மேலும் மெகரப் கான அரபி வசனங்களை செதுக்கும்பணியில் முழு கவனம் செலுத்தி அதற்காக மதுக்கூர் பெரிய பள்ளி இமாம் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்பில் உள்ளார் மேலும் மெம்பர் படி அதன் இரு புறங்களிலும் உள்ள அலமாரிகள், இமாம் உரையாற்றும் போடியம் போன்ற மரவேலைகளை அழகு பெற செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
இப்பள்ளி சிறப்பாக முழுமைபெற அரும்பாடுபடும் ஜமாத்தார்களுக்கும் பொருள் ஆலோசனை உழைப்பை தரும் நம் மக்களுக்கும் வெளிநாடுகளில் நிதி வசூல் செய்து தந்த மற்றும் மீண்டும் நிதி பெற உழைக்கும் மதுக்கூர் சுன்னத்துல் ஜமாத் , ஹபிபீ நண்பர்கள் குழு,
மக்கள் நல குழு போன்ற அமைப்புகளுக்கும் இறைவா மேலும் மேலும் பரக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் செல்வ வளத்தையும் அருள எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம் ஆமீன் ஆமீன் – விவரங்கள் அறிய வந்தது.