மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் முதல் கூட்டம்

மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் முதல் கூட்டம் 20 6 2024 அன்று மாலை 6:45 மணி அளவில் மதுக்கூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது
கூட்டத்திற்கு தலைமை வைத்த தலைவர் ஜனாப் முகைதீன் மரக்காயர் முன்னாள் உறுப்பினராக இருந்து இந்த சபையை நிர்வகித்த குடும்பத்தினரை நினைவு கூறி வருங்காலங்களில் இந்த கமிட்டி அது போன்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார்கள் மேலும் நமது புதிய பள்ளியின் திறப்பு விழாவை உறுப்பினர்கள் முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பிக்க வேண்டும் என கூறினார்கள்

பிறகு கமிட்டியின் பொருளாளர் ஜனாப் அயூப்கான் அவர்கள் கடந்த இரண்டு மாத கணக்கினை மிக சுருக்கமாக வாசித்தார்கள்
பின்னால் பேசிய கமிட்டியின் செயலாளர் ஜனாப் புகாரி அவர்கள் புதிய பள்ளியின் திறப்பு விழாவிற்கு அனைவரின் ஒத்துழைப்பை வேண்டினார்கள். மிப்தாகில் இஸ்லாமிய சங்கத்தின் பொருளார் ஜனாப் ரியாஸ் அவர்கள் தனது நன்றி உரையில் பள்ளியின் கட்டுமானத்தை பற்றியும் தற்போது உள்ள பொருளாத நிலை காலக்கெடு கொண்டு சிறப்பான முடிவுகள் எடுத்து பள்ளி சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு வருவதை பாராட்டி நன்றி கூறினார்கள். கூட்டம் இனிதே முடிந்தது.

Leave a Reply