
நமது வாழ்க்கையில் ஆண்டு அனுபவித்து வயது முதிர்ந்து மரணம் அடைந்த பலபேரை கண்டு இருக்கின்றோம்.
ஆனால் இந்நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இளம் வயது நம்மவர்கள் மரணம் அடைவதை காணும் பொழுது நமது மனம் வேதனையை அடைகின்றது.
இளம் வயது மரணம் என்றால் அது அவர்களுடன் மட்டும் முடிவதில்லை. இளம் வயது கணவர் மனைவி விவரம் அறியாத இளம் குழந்தைகள் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அதனை தடுப்பதற்கு நல்ல உணவு ஓய்வு உடற்பயிற்சி பல வழிமுறைகள் இருந்தாலும் நமது உடலில் கூறுகளில் உள்ள குறைபாடுகளை உடன் கண்டு அதற்காக மருத்துவ வசதி செய்து கொள்வது அறிவு சார்ந்த முயற்சியாகும்.
இந்நாட்களில் அதற்கான செலவுகள் பெரும் சோதனையாக இருக்கும் பட்சத்தில் இந்த மருத்துவ காப்பீடு பற்றியும் அதன் விவரங்களை அறிந்து கொள்ளவும் மதுக்கூரை சார்ந்த மருத்துவ காப்பீட்டு ஆலோசகர் ஆபிதீன் அவர்களிடம் ஒரு நேர்காணலை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
பொதுவாக மருத்துவ காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?
எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க ஒரு முன் திட்டம் தான் மருத்துவர் காப்பீட்டு திட்டம். இதன் மூலம் அவசியமான மருத்துவ சிகிச்சைகளை செய்து கொள்ளலாம். பெரும் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.
எந்த வயதில் காப்பீடு செய்து கொள்ளலாம்?
குறைந்த வயது 18 நிரம்பியவராக இருக்க வேண்டும் அதிக வயது 74 வருடங்கள் ஆகும்.
குறைந்த வயது வரம்பு குடும்ப காப்பீட்டு திட்டங்களுக்கு பொருந்தாது. காப்பீட்டு திட்டங்களை ஆயுள் காலம் முழுவதும் நீடித்துக் கொள்ளலாம்.
எந்தவிதமான நோய்கள் இதில் சேராது அல்லது எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
எல்லா விதமான நோய்களுக்கும் இந்த காப்பீடு பாதுகாப்பு அளிக்கும். காப்பீடு எடுக்கும் முன் உள்ள நோய்களுக்கு (ஆஸ்துமா இரத்த அழுத்தம் அதிக கொழுப்பு சர்க்கரை நோய் ) குறைந்தபட்சம் 36 மாதம் காத்திருக்கும் காலமாகும். ஆனால் சில காப்பீடுகள் திட்டங்கள் எடுத்த 30 நாட்களுக்குப் பிறகு முழு பாதுகாப்பு தரும்.
மூத்த குடிமக்கள் 60 வயதில் நிரம்பியவர்கள் கணவர் – மனைவி சேர்ந்து ஒரே காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.
மகளிர் காண காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
மகளிர்கள் காப்பீடு எடுத்த ஆறு மாதங்கள் பின் கருவுற்றால் அவர்களுக்கு மருத்துவ சோதனைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை காப்பீட்டு கழகம் வழங்குகின்றது. அவர்கள் குழந்தை பிரசவத்திற்கு பிறகு ஒ௫ தொகையை காப்பீட்டு கழகம் வழங்குகின்றது. இதற்கான பிரீமியமும் மிக குறைவாகும். பிரியமான வர்களுக்கு இந்த காப்பீட்டை பரிசாக அளிக்கலாம்.
இழப்பினை எப்படி பெற்றுக்கொள்வது?
பெரும்பாலான சிறந்த மருத்துவமனைகள் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சியின் செலவை நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும்.
அப்படி அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் செய்யும் சிகிச்சைக்கு பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் கழகத்தின் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான செலவு காப்பீட்டுக் கழகம் பாலிசிதாரர்களுக்கு நேரடியாக வழங்கி விடும். இதற்கு பாலிசி முகவர்கள் உதவ முன் வருவார்கள்
மேலும் காப்பீட்டு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள தங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும்?
ஒவ்வொரு காப்பீட்டு திட்டமும் தனி நபர்களின் தேவையை பொருத்தது தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் மருத்துவ காப்பீடுகள் பற்றி அறிந்து கொள்ள என்னை தொடர்பு கொள்ளலாம். எனது மொபைல் எண் 99 76 79 29 98 இமெயில் abdeen_investmentidea@yahoo.com
நன்றி வணக்கம்.