இந்த வாரம் (30-09-2025)

In this striking black and white image, gloved hands are writing in an open book with a feather pen, evoking a vintage and mysterious feel.

மதுக்கூரில் கடந்த வாரம் மிகுந்த வெப்பம், சில நாட்களில் மேகம், இரவு நேரங்களில் இடைவேளைமழை என்று நாள்தோறும் மாறும் காலநிலை காணப்பட்டது. நேற்று என்ன வானிலை இருந்தது என்பதே மறந்து போகும் அளவில் அவ்வப்போது மாறியது.

ஜனாப் வஹாப் அவர்களின் மறைவு நம்மை மிகவும் வேதனையடைய செய்தது. அவர் எப்போதும் சிரிப்பு முகத்துடன், எல்லா சமூக நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு, எந்த அரசியல் கட்சிக்கும், இயக்கங்களுக்கும் சார்பில்லாமல் ஒய்வு இல்லாமல் செயல்பட்டார். அவரின் இல்லாமை நமக்கு பெரிய இழப்பாகும்.

ஏதாவதொரு சமயம் குடும்ப நண்பர்களின் அழைப்பை ஏற்று திடீரென நாங்கள் காரில் குத்தாலம் சென்றோம். இப்போதுள்ள பருவகாலம் முன்பு போல தீர்மானமற்றது என்பதால், ஈரமான தட்பவெப்ப நிலை நிலவி வந்தது. பாலாறு நீர்வீழ்ச்சி, அருகிலுள்ள கேரளாவில் அமைந்துள்ளது, மிகவும் சிறந்து நல்ல நீர் வீழ்ச்சியுடன் காணப்பட்டது. கேரளா வனத்துறை அங்கு சிறப்பான சுற்றுலாப்பணிகளை செய்திருந்தது. குத்தாலத்தில் உள்ள மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் முதலாம் நாளில் நீர் வரத்து பெரிதும், இரண்டாம் நாளில் சமமாய் இருந்தது. மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் கூட்டம் இல்லை எனவே குடும்பம் முழுமையாக ரசித்து குளித்தது. வாகன வசதியை Madukkur Right Travels (madukkur.com classifieds) ஏற்பாடு செய்து தந்தார்கள்.

நல்ல உணவு உண்ண விருப்பம் உள்ளவர்கள் குத்தாலத்தில் உள்ள பார்டர் ரஹுமது பரோட்ட உணவக்கத்துக்கு   இரவு உணவிற்கும், மதிய உணவிற்க்கு கலாரி கறி விருந்து –தென் காசி (காயல்பட்டினம் சுவை சென்று வரலாம். திரும்பி வரும் போது மதுரை வழியாக குடும்பம் விடாமல் சாப்பிங் செய்தது. எல்லோரும் நலமாக வீடு திரும்பினோம்.

மற்றொரு நாளில் மன்னார்குடி சென்று “சக்தி திருமகன்” திரைப்படத்தை பார்த்தோம். எல்லா பொருளாதார, அரசியல், சமூக சிக்கல்களையும் நன்கு காட்டினார்கள் ஆனால் திரைப்படத்தின் தீர்வு நடைமுறையில் சாத்தியமென்று தோன்றவில்லை.

madukkur.com இல் இரண்டு முக்கியமான கட்டுரைகள் வெளியிட்டோம்: ஒன்று சமுதாய முன்னேற்றத்திற்கு நமக்கு உள்ள நிலையை பற்றியது; மற்றொன்று அனைவரும் வைத்திருக்க வேண்டிய காப்பீட்டு முக்கியத்துவத்தை பற்றியது.

அடுத்த வாரம் “My this week”’லே உங்களை பார்க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.]