ரதன் டாடா : ” 2020 – லாபம் நட்டத்தை பற்றி கவலைப்படாமல் உயிர்வாழ்வை நோக்கி வாழும் ஆண்டு ” என்று கூறியதாக சமூக வலைப்பின்னல்களில் வெளியிடப்பட்டது. பின்னர் அந்த செய்தி போலியானது என நிரூபிக்கப்பட்டாலும் , அந்த அறிக்கையில் சில அர்த்தங்கள் உள்ளன.
நீண்டகாலமாக தடைபடுத்தப்பட்ட விமான சேவை துரிதமாகப்பட்டதால் வெளிநாடுகளில் வாழும் நமதூர் மக்கள் தாயகம் வர ஆரம்பித்துள்ளார்கள். சிலர் தாயகம் வந்து உள்ளார்கள்.
தாயகம் வந்தடைந்த நமது மக்களுக்கு, இந்தியாவில் இப்பொழுது உள்ள பொருளாதார நிலை, மருத்துவ பாதுகாப்பு நிலை உட்பட சில சோதனைகள் (challenges) காத்துள்ளன. இவை மகிழ்வு கொள்ளும் நிலையில் இல்லை, எனினும் இதை நாம் விரும்பி தேர்வு செய்யவில்லை. காலத்தின் கட்டாயமாகவிட்டது. நாம் இதனையும் கடந்து வெற்றிக்கொள்வோம்! நம்பிக்கைதான் இப்பொழுது முலதனம்.
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு பொருளாதார, சுகாதார, சமூக மீட்சி காலகட்டங்களில் உள்ளன. இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு திரும்பி வருபவர்களுக்கு, பழக்கப்படுத்திக்கொள்ள பல்வேறு மனநிலை, அனுபவம் மற்றும் தேவைகள் காத்துக் கொண்டிருக்கின்றன – நாம் கிழ் கண்டவாறு பட்டியலிடலாம்.
குடும்பம்: குறுகிய விடுமுறைக்கு மாறாக, இப்போது சிலருக்கு குடும்பத்துடன் நிறைய நாட்கள் தங்குவதும், அவ்வாறு இருக்கும்பொழுது மாறும் அன்பு, பாசம், கவனிப்பு மற்றும் கண்டிப்புகள்.
ஆரோக்கியம்: இப்பொழுது உள்ள வைரஸ் தொற்று தடுப்பு முறை, முன்பை விட பொது ஆரோக்கியம், மற்றும் சுகாதாரத்தைப் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது
உறவு: நமது உறவுகள், அவர்களின் முன்றைய எதிர்பார்ப்பு, இப்பொழுது உள்ள அணுகுமுறை, அன்பு, பிணைப்பு, அலட்சியம் ஆகியவற்றின் அனுபவங்கள்.
பொருளாதாரம்: தடைபட்ட வருமானம், கடன், சேமிப்பு நிலமை, தற்பொழுது வருமானம் ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள், சிக்கனம்
கல்வி: நாம் நம்மை மேன்மைபடுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் , நமது குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய கல்வி, அவர்களுக்கான வேலைவாய்ப்புகள், கல்யாணம்
சமுகம்: இப்பொழுது உள்ள சமுக நடைமுறைகள், மாற்ற வேண்டிய, மாற்றிக்கொள்ள வேண்டிய நடைமுறைகள், கலாச்சாரம், நமது சந்ததியார்களுக்காக உருவாக்கவேண்டிய சமுதாய அமைப்பு
இவைகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது – இனி வரும் தொடர்களில் சிந்திக்கலாம்……
உங்கள் கருத்துகளை பதிவு செய்ய: [email protected] விற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
மதுக்கூர்.காம் இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற உறுப்பினராகுங்கள் : madukkur.com/register
1 கருத்து
நல்ல பதிவு
ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம்.
ஒரு மாதம் விடுப்பில் வந்து வாழ்ந்த காலங்கள் வேற..
இப்போது காலமெல்லாம் குடும்பத்துடன்..
ஆரோக்யம், கல்வி, சுபகாரியங்கள், தொழில்…
இறைவன் போதுமானவன்.