அன்பான மதுக்கூரியர்களே,

இந்த வார என் வாரம் இதழ் வழியாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது எண்ணங்கள், கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த பயணத்தில், முந்தைய கட்டுரைக்கு தந்த உங்கள் ஊக்கம் மற்றும் ஆதரவுக்கு இதயம் கனிந்த நன்றி.

பழக்கப்படி, முதலில் வானிலை பற்றி தொடங்குவோம். எதிர்பார்த்த கனமழை, வழக்கம்போல, எம்மை ஏமாற்றி, சில நாட்கள் வெயில் மற்றும் வறட்சியுடன் கடந்து சென்றது.

நமது சமூக வழிபாடுகளில், மௌலத் ஷெரீப்கள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அல்லாஹ் தமது கருணையையும் மன்னிப்பையும் எங்கள்மேல் பொழிவாராக.

அந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றிலும் தவறாது கலந்து கொள்வது வழக்கமான எனது சில நண்பர்களை நான் சந்தித்தேன். அவர்களை  அதிராம்பட்டினத்தில் நடைபெற்றும் சயோனிஸ்ட் இஸ்ரேல் அரசால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் பேரணி மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள்; அவர்களின் லாஜிக்கை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இப்போது நம் சுற்றுச்சூழல் நிலையைப் பார்ப்போம். காவேரியின் அருளால், நம் ஆற்றில் (கால்வாய்) நீர் தொடர்ச்சியாக பாய்வதைப் பார்த்ததில் மகிழ்ச்சி. எனினும், ஒரு நலன்புரியாளர் குறிப்பிட்டது போல, நம் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பவில்லை — குறிப்பாக சிறமெல்குடி சாலையில் உள்ள புதுக்குளம் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.

இதற்கிடையில், ஒரு புதிய மழைநீர் சேகரிப்பு கால்வாய் தற்போது பஞ்சாயத்து குழுவின் முயற்சியில் அமைக்கப்படுகிறது. இதற்காக நமது மன்ற உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது, முக்கிய கால்வாயிலிருந்து முகுட்டுச்சாலை வரை ஒரு கால்வாய் பாய்கிறது. முகுட்டுச்சாலை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சில குறுகிய நீர்வழிகள் உள்ளன; இப்போது புதிய கால்வாய்கள் நீர்த்தேக்கத்துக்குத் திசை திருப்பப்படுகின்றன. ஒரு யோசனை எனில், முக்கிய கால்வாயில் ஒரு ஷட்டர் அமைத்து, இடைவெளிகளை இணைப்பது மூலம், அந்த நீரை நேரடியாக நீர்த்தேக்கத்துக்குக் கொண்டு வரலாம் — இது சாத்தியமா என்றும் மற்ற வழிகளையும் மக்கள் குழு, புதுக்குளத்தை பராமரிக்கும் அமைப்பு, ஆய்வு செய்யலாம்.

திரைப்பட ரசிகர்களுக்காக, நான் பரிந்துரைக்க விரும்பும் படம் மலையாள திரைப்படமான “டொமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ் ஆகும். இது ஒரு நகைச்சுவை மற்றும் துப்பறியும் தன்மையைக் கொண்ட படம்; இதில் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஓரு சிறப்பு என்னவென்றால் — மலையாளிகள் ஒரு திரைப்படத்தை வெறும் திரைப்படமாகவே பார்கிறார்கள், அதில் நடித்தவர்களை அரசியல் அல்லது சமூகக் கண்ணோட்டத்தில் மதிப்பிடுவதில்லை.

ஆனால், கேரளாவுக்குப் பிறகு கல்வியறிவு அதிகமான மாநிலமான தமிழ்நாடு, சமீபத்தில் கரூர் சம்பவம் போன்ற துயரமான நிகழ்வுகளைச் சந்தித்து வருகிறது.

அதே நேரத்தில், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் போன்றவை இல்லாததாலும், குடும்பங்கள், நடிகர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளை பொழுதுபோக்காகக் காணத் தொடங்கியிருக்கலாம் — இது நாம் ஆழமாக சிந்தித்து, செயல்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.

முடிவிற்கு வருவதற்கு முன், என் முந்தைய கட்டுரையில் தவறவிட்ட ஒரு சிறிய தகவலை இங்கு பகிர விரும்புகிறேன் — அது நாங்கள் குற்றாலத்தில் தங்கியிருந்த இடம் பற்றியது.
நாங்கள் செங்கோட்டை காடேஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தோம். அது மெயின் நீர்வீழ்ச்சிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
அந்த இடம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும், செலவு குறைவாகவும் இருந்தது; ஒரு சௌகரியமான தங்குமிடத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் அங்கிருந்தன.

மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

Post Views: 71

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.