தேநீர் நேரம் - Tea Time

கிராமங்களில் புத்தக கூடுகள்…

ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய
என்ன சேதி? எப்படி இருக்கீங்க?
இனையம் வந்து எவ்வளவு நாளாச்சி?

சரி சிறிய தகவல்களுடன் பகிர்ந்துகிட்டு உங்களையும் நலம் விசாரிக்கலாம்னு ஒரு பதிவு.

எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் ஊரில் இயல்பு வாழ்க்கை.வியாபாரம் மந்தமாக இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கையில்  பள்ளிகள் திறந்து பாடங்கள் படிக்கின்றனர். நல்லது ஆன் லைன் வகுப்புகள் என்று  பிள்ளைகள் சீரழியாமல் இருக்க. திறந்தது நல்லது. ஆமாங்க செல்லை கொடுத்தால் கேம் விளையாடுது அல்லது பிள்ளைகள் வேற எதுவும் பார்க்க வாய்ப்பு. அதுக்கு பள்ளிக்கு செல்வது நல்லது.

இது மிகவும் ஆபத்தான பருவம். செல்களின் சமூக வலைதளங்ளில் வேற எதுவும் பார்க்கும் குழந்தைகளால் மஹ்ரமான உறவுமுறையே மாறும். இது எனது தப்பான பார்வை சிந்தனை என நினைக்காதீர்கள். இது எதார்த்தமான உண்மை. ஆகவே , நல்ல நமது சமுதாய சிந்தனைக்காக பொதுவாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இறைவன் நம் அனவைரையும் அது போன்ற தீங்குகளிலிருந்து பாதுகாப்பானாக!

கிராமங்களில் புத்தக கூடுகள்…

வாசிக்கும் பழக்கத்தை அதிகபடுத்த நமது இந்தியாவில் பல ஊர்களில் முயற்சிகள் உள்ளது. என்ன தான் கணினி உலகமாக இருந்தாலும் இன்றும் புத்தகம் வாசிக்கும் மக்கள் இருக்கின்றனர். புத்தக கண்காட்சியும் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் நடைபெறுகிறது. சமீபத்தில் கூட பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த முயற்சியில் கேரளாவில் கொல்லம் ஜில்லாவில் உள்ள பெருங்குளம் என்ற கிராமம் புத்தக கிராமம் என்று பெயர் பெற்றுள்ளது. காரனம் இந்த கிராமத்தில் ஆங்காங்கே புத்தகம் கொண்ட அலமாரிகள் அமைத்துள்ளனர். கிராமவாசிகள் புத்தகத்தை எடுத்து படித்துவிட்டு மீன்டும் அதிலே வைத்து விடுகின்றனர். சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயன் பாராட்டி புத்தக கிராமம் என அறிவித்தார்.

மீன்டும் சுவையான செய்திகளுடன் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

கருத்து தெரிவியுங்கள்

madukkur.com

FREE
VIEW