ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய பேராவல்
எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.
நமது மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த நிவர் புயல்
நமது மக்களின் பிரார்த்தனைகளை ஏற்று எல்லாம் வல்ல இறைவன் நமது மாவட்டத்துக்கு அந்தப் புயலை தரவில்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே!
ஊரில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
காலை நேரங்களில் சிறிய தூறல் மழை இருந்தது.
இன்று அதிகபட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
நல்ல மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
காற்றின் வேகம் 40 கி.மீ. வேகம் வரை இருக்க வாய்ப்பு இருக்க உள்ளது.
காற்றிலிருந்து நம்மையும் நமது உறவினர்களையும் குடும்பத்தார்களையும் ஊர் மக்களையும் நமது ஊரையும் பாதுகாக்க பிரார்த்தனைகள் செய்வோம்.
நமது ஊரிலும் புயல் எச்சரிக்கை காரனமாக பலரும் தங்கள் வீடுகளில் தென்னை மட்டைகளை கழித்தனர். சில வீடுகளில் ஆபத்தான மரங்களை வெட்டினர்.
சமுதாய அமைப்புகள், பள்ளிவாசல் ஜமாத்துகள் தங்கள் பணிகளை ஆலோசனை செய்தனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வசித்தனர். குறிப்பாக மெழுகுவர்த்தி எங்கேயும் கிடைக்கவில்லை.
ஆமாம் ஒரு கிலோ மெழுகு வர்த்தி ரூபாய் 250 ஆகும்.
மெழுகு வர்த்தி கிலோ கணக்கில் விற்பது இதுவே முதல் முறை.
மற்றபடி இன்று வழக்கம்போல பேரூராட்சி தண்ணீர் வீடுகளுக்கு வந்தது.
பால் வழக்கம்போல இன்று வினியோகம் இருந்தது.
இதுவரை மின் தடையும் நமது ஊரில் இல்லை.
மதுக்கூர் .காம் இனைய தளத்தைப் பற்றி விரைவில் ஒரு அறிமுக செய்தி எழுதுவோம்.
காரனம் நமது ஊரில் உள்ள இப்போதைய இளைஞர்களுக்கு ஒரு தகவலுக்காக இன்ஷாஅல்லாஹ்.