தேநீர் நேரம் - Tea Time

தமிழர் திருநாள், பண்டிகை காலங்கள்.

தமிழர் திரு நாள் 

 பண்டிகை காலங்கள்

 பொங்கல் விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்வில் மக்கள் திரும்பினாலும் நிம்மதி இல்லா அலைச்சல்கள்…

 ஒரு புறம் நாடு முழுவதும் போராட்டங்கள்.. தாய்மார்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு பொதுத்தேர்வு எழுதுவதால் திடீரென்று எல்லா ஆவனங்களும் அரசு கேட்பதால் பள்ளிகள்  கேட்க

 தாய்மார்கள் பள்ளிக்கும், நகலகத்திற்கும், தாளகத்திற்கும், அலைச்சல். என்னமோ போங்க.. எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.

 இடையகாடு முழுவதும் சாலைகள் போடுவதற்காக இருந்த சாலைகள் போய்விட்டன. எல்லாம் பெயர்த்து எடுத்து பத்து நாளாக… அனைவருக்கும் சிரமமான பயணங்கள்.

 பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் படும் அவதிகள் சொல்ல முடியாது. பொங்கல் சந்தை சிறப்பாக இந்த  வருடம் நமதூரில் இருந்தது. ஒரு கட்டு கரும்பு ரூபாய் 250 வரை விலை போனது. போகி வரை நல்ல வியாபாரம் இருந்தது. வழ்க்கம் போல தர்கா திடலில் கடைகள் போடப்பட்டு இருந்தன. நம்மைப்போல சந்தையை பார்க்க ஆர்வத்துடன் பயணத்தில் இருந்து வந்த சகோதரர்களும் பார்க்க வந்தனர்.

 

  

 

கருத்து தெரிவியுங்கள்