தேநீர் நேரம் - Tea Time

கடை திறந்தால்… ரொம்ப பிஸி,..

ஆத்மார்த்த நட்புகளே

 நலம் நலமறிய பேராவல்?

 என்ன சேதி? எப்படி இருக்கீங்க?

 ஒரு தலை ராகம் காலம்

 ஹா ஹா என்ன சேதி? எப்படி இருக்கீங்க?

 நேற்று சிகை அலங்கார நிலையம் வைத்துள்ள நண்பருக்கு போன் செய்து எப்போது கடை திறப்பீர்கள் எனக் கேட்டேன். சங்கத்தின் கட்டுப்பாடாம். இப்போது கடை திறப்பு இல்லை எனக்கூறினார். ஊரில் யாரைப்பார்த்தாலும் ஒரு தலை ராகம் சங்கர் மாதிரி. ஆமாங்க கொரோனாவுக்காக கடைகள் 144, இதில் சலூன் கடைகளும் திறப்பதில்லை.

 கடை திறந்தால் அவர்கள் எல்லாம் ரொம்ப பிஸி, 

கொரோனா பாதிப்பு ஊரடங்கு , 144 வந்த பிறகு ஊரில் யாரும் அதிகம் வெளியே வருவதில்லை. மத வழிப்பாடுகள் அனைத்தும் இல்லங்களில். இரன்டு வாரமாக  வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை கூட நடக்கவில்லை. காலை நேரங்களில் செய்தித்தாள், காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க வெளியே வருகிறார்கள்.

 உறவுகள் அனைவரிடமும் போனில் தான் பேசுகிறார்கள். இறைவன் போதுமானவன். இறைவனிடம் அதிகம் பாவமன்னிப்பும் பிரார்த்தனைகளும் செய்வோம். இந்த நோயினால் நமக்கும் , நமதூரைச் சர்ந்த யாவருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது.

‘இறைவா! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்’.

கருத்து தெரிவியுங்கள்