தேநீர் நேரம் - Tea Time

துல்ஹஜ் மாதம் பிறந்துவிட்டது…

துல்ஹஜ் மாதம் பிறந்துவிட்டது. நமது ஊரில் ஹஜ் பெரு நாள் எதிர் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி ஆகும்.

நமதூர் பேரூராட்சி என்பதால்  வழிபாட்டு தலங்கள் இன்னும் திறக்கவில்லை. பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் வெள்ளிக்கிழமை வழக்கமான லுஹர் தொழுகையுடன் செல்கிறது. அடுத்த மாதம் முதல் பள்ளிவாசல்கள் திறக்க வாய்ப்பு உள்ளது.

நமது மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறதுசுமார் 1500 பேருக்கு மேல் தொற்று நோய் வந்துள்ளதுபலரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த புதன்கிழமை முதல் ஞாயிறு வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன, மருந்தகங்கள் மட்டும் திறந்துள்ளது.

ஊரில் வெளி நாட்டில் இருந்து ஒரு சிலர் வந்து கொண்டு இருக்கின்றனர்அதே போல மார்ச், ஏப்ரல் மாதங்களில் விடுமுறையில் வந்த சிலர் மீன்டும் அமீரகம் செல்கின்றனர்.

ஊரில் கடந்த இரன்டு மாதமாக நிறைய புதிய தொழில்கள் துவங்கியுள்ளனஉணவகங்கள் ஆயத்த ஆடையகங்கள் என நிறைய வந்துள்ளன.இன்னும் புதிய பல தொழில்கள் துவங்க,  வாய்ப்புகள் உள்ளன.

ஆற்றில் தண்ணீர் செல்கிறது. விவசாய பணிகள் துவங்கியுள்ளன. வேளான்மை சார்ந்த பணிகள்  நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களிடம் இப்போது தொற்று நோய் சம்பந்தமாக விழிப்புணர்வு வந்துள்ளது. மக்கள் வெளியே செல்ல சிந்திக்கின்றனர்.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்கின்றனர்.

 நம்மையும் நமது ஊரை பாதுகாக்க பிரார்த்தனைகள் செய்வோம்.. இறைவன் போதுமானவன்.

கருத்து தெரிவியுங்கள்