தேநீர் நேரம் - Tea Time

தேநீர் நேரம்: Sep 04, 2020

ஆத்மார்த்த நட்புகளே!

நலம் நலமறிய…

ஊரில் இறையருளால் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. சுப காரியங்களும் நடைபெறுகிறது.எல்லா புகழும் இறைவனுக்கே! வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வந்து செல்கிறது.கடைகள் இரவு 8 மணி வரை திறந்துள்ளது. இன்னும் பள்ளிக்கூடங்கள் மட்டும் திறக்கவில்லை.  

சற்று நாட்களுக்கு முன் படித்த செய்தி…

ஐக்கிய ராஜ்ஜியத்தில் வெளிவரும் பத்திரிகை 2020ல் முக்கியமான 50 பெண்களின் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் ‘சைலஜா டீச்சர்’ அவர்கள் முதலிடத்தில் உள்ளார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. 

இதற்கு முன் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து பிரதமரை இரன்டாவது இடத்தில் நகர்த்தி முதலாவது இடத்தை பிடித்த அமைச்சருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

தொற்று நோய் பரவும் இந்த காலகட்டத்தில் எடுத்து வரும் சிறப்பான சேவைகளுக்கு மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டு வந்த நிபா வைரஸிலிருந்தும் மக்கள் சேவை செய்ததற்காக இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

“ Kerala Health Minister KK Shailaja Teacher has been named the winner of Top 50 Thinkers of 2020, a list compiled by UK’s Prospect Magazine. The Kerala Health Minister beat New Zealand Prime Minister Jacinda Ardern to top the global list while the latter came a close second. The magazine has lauded the health minister’s efforts to flatten the COVID-19 curve.

Identifying her as a communist, the magazine describes her as ‘indefatigable’ and also lauds Kerala’s deft handling of the 2018 Nipah virus outbreak, under Shailaja teacher’s leadership. In early 2020, when COVID-19 was still limited to China, Shailaja teacher foresaw its inevitable arrival in India and took adequate measures to handle the virus. “

இவை அனைத்தையும் மீறி  நம் நாட்டில் என்ன பெரிய வேடிக்கை என்றால்…. எங்கோ ஏதோ ஒரு பகுதியில்  தொற்று நோய் இருந்த போதெல்லாம் மக்கள் வீட்டுக்குள் இருந்தார்கள்.. ஆனால்  தொற்று அருகில் வரும்போது .. மக்கள் கட்டுப்பாடுகளிலிருந்து நிவாரணம் தேடுகிறார்கள்….. என்னத்த சொல்ல….

இருப்பினும்…மக்கள் மனதில் தொற்று நோயின் பயம் இருக்கிறது.  மக்கள் வெளியே வரவும், புதிய மனிதர்களை பார்க்கவும் அச்சப் படுகின்றனர்.

கருத்து தெரிவியுங்கள்