ஆத்மார்த்த நட்புகளே..
நலம் நலமறிய
தாயகத்தில் பருவ நிலையில் நல்ல மாற்றம்.
கடந்த இரன்டு நாட்களாக வெயிலே இல்லை.
ஒரே சாரல் சாரல் காற்று,
காற்றின் வேகம் பகல் நேரங்களில் 15 ல் இருந்து 25 கி,மீ, வரை
இன்றைய அதிகபட்ச வெப்பனிலை 29.c
குறைந்த பட்சமாக 23.c அடுத்த வரும் தினங்களில் இந்த வாரம் பகல் நேர வெப்பனிலை அதிகமாகவும் 31 டிகிரி வரையும் இரவு நேர வெப்ப நிலை குறைந்து 21 டிகிரிவரையும் இருக்கும். கடந்த வருடங்களை விட இந்த வருடம் பருவமழை நல்ல மழையை நமதூருக்கு தந்தது. ஒரே நாளில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை வரை பதிவானது.
ஊரில் விலைவாசி உயர்வு அன்றாட மக்களின் சாமான்ய மக்களின் புலம்பல்கள் அதிகம். நேற்று காய்கறி சந்தையில் வெங்காய விலை உயர்வு பற்றி சுவையான கலாய்ப்பில் சில தகவல்கள் நமது ஊரில் உணவகங்களில் வெங்காய விலை உயர்வினால் எந்த கடையிலும் ஆம்லெட் கிடையாதாம். வெங்காய சட்னி இல்லையாம்.
அதுபோல ஆனியன் ரோஸ்ட் கிடையாதாம். ஹ ..ஹ… ..
எல்லா புகழும் இறைவனுக்கே!