தேநீர் நேரம் - Tea Time

தமிழ் நாடு தினம்

ஆத்மார்த்த நட்புகளே

 நலம் நலமறிய பேராவல்

 ஊரில் இயல்பான வாழ்க்கை செல்கிறது.

 எல்லா புகழும் இறைவனுக்கே!

 பருவ நிலையில் மாற்றம்

 ஐப்பசி மாதம் அல்லவா?

 இரவு நேர வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும்

 பகல் நேர வெப்ப  நிலை அதிக பட்சமாக 33 நிலையும் உள்ளது.

 கடந்த நான்கு ஐந்து நாட்களாக பனி பெய்ய துவங்கி விட்டது.

 அதிகாலை நேரங்களில் குளிர்ந்த காற்றும் உள்ளது.

 கடை வீதிகள் வழக்கம் போல திறந்து இரவு எட்டு மணிக்கு அடைத்து வருகின்றனர்.

இன்னும் இரன்டு வாரஙக்ளில் தீபாவளி வருவதால் இனி மேல் இரவு 9 மணி வரை திறந்து இருக்க வாய்ப்பு. அவ்வப்போது புதிய தொழில்களும் நமதூரில் துவங்கப்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழ்ந்த சகோதரர்கள் பலரும் இப்போது தாய்மண் தேடி வந்துக் கொண்டு இருக்கின்றனர். இனி ஊரில் புதியதாக தொழில் துவங்குபவர்களுக்கு கடைகள் வணிக வளாகங்கள் கட்டப்பட வேண்டும். ஏனென்றால் கடைகள் இல்லை,

சென்ற வாரம் புதியதாக யம்மி புட்ஸ் , நீலகிரி டிரேடிங் திறக்கப்பட்டது.

பல உணவகங்கள் நமதூருக்கு வந்துள்ளது.

 அதில் புதியது பர்மா அத்தோ கடை.

 சாலையோர உணவகமான இந்த அத்தோ கடை

 அரசு மருத்துவமனை முகப்பில் உள்ளது.

 இதில் ப்ரத்யோகமாக சில பர்மா உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

நமது முன்னோர்கள் அதிக அளவில் தொழில் செய்தது பர்மாவில் தான்.

 இரன்டாம் உலகப்போருக்கு பின் பர்மாவில் இருந்து நடந்தே ஒரு சிலர் கல்கத்தா வரையிலும், இன்னும் பலர் பல மா நிலங்களை நடை பயணமாக வந்தே நமதூர் வந்துள்ளனர். அவர்கள் வந்ததும் தொழில் துவங்கவே அப்போது நமது ஜமாத் சார்பாக கடைகள் கட்டப்பட்டது. அதற்கு பெயர் பர்மா லைன் என்று பெயர். நவம்பர் ஒன்றாம் தேதி. மா நில மொழி தினம்.

மொழி வாரியாக பேசும் மக்களை கணக்கில் வைத்து

 தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர் நாடகா உருவானது,

 ஆம் இன்று தமிழ் நாடு தினம்.

 அன்றைய காலங்களில் நமது இல்லங்களில் தேத்தண்ணீர்  ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை நமது தாய்மார்கள் பயன்படுத்துவார்கள். டீ அல்லது சாயா

 இதற்கு சரியான தமிழ் சொல் தேனீர் அல்லது தேத்தண்ணீர் எனலாம்.

 இது போல அரிய தமிழ் சொற்களை நாம் பயன் படுத்த துவங்குவது நல்லது.

 மெயின் ரோடு என்ற ஆங்கில வார்த்தைக்கு நாம் இனி தமிழில் முதன்மை சாலை என அழைத்து வழக்கத்தில் கொண்டு வரலாம்.

அடுத்த அடுத்த தொடர்களில் இனி தமிழ் வார்த்தைகளை நினைவு படுத்தலாம்.

 எல்லா புகழும் இறைவனுக்கே!.

கருத்து தெரிவியுங்கள்