ஆத்மார்த்த நட்புகளே, நலம் நலமறிய பேராவல்…. எப்படி இருக்கீங்க?…
பெருமழைக்காலம்…. ஊரில் கடந்த ஒரு வார காலமாக ஊரில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு பின் இது போல அடமழை காலங்கள். இப்போதே நமது ஊரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. புது குளத்திற்கும் தண்ணீர் வருகிறது. கண்ணன் ஆறு உடைப்பு எடுத்து ஓடுகிறது.
அருகே உள்ள கிராமங்களில் எல்லாம் நல்ல மழை பெய்துள்ளது. பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு. நமதூர் தொட்டிப்பாலத்தில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
ஊரில் இரவு நேரத்தில் மட்டுமல்ல பகல் நேரத்திலும் நல்ல குளிர். பல வீடுகளில் மின்விசிறிகள் இயக்குவதில்லை.
இன்று டிசம்பர் ஆறாம் தேதி. பாபரி மஸ்ஜித் நினைவு தினம். நமது ஊரிலும் நடைபெற்றது,.
பகல் நேர வெப்ப நிலை அதிக பட்சமாக 29. டிகிரி வரையும் இரவு நேர வெப்ப நிலை வரும் நாட்களில் 21 டிகிரி வரையும் வர வாய்ப்பு. மழைக்காலஙக்ல் என்பதால் வியாபாரம் மந்தமாக கடந்த நாட்களில் இருந்தது. காரனம் மக்கள் குளிர், மழை, சாரலில், காற்றில் வீட்டிலேயே இருந்தனர்.
இனையங்கள் அறிமுகமான காலங்களிலே நமதூருக்கு உருவானது தான் மதுக்கூர்.காம். புலம் பெயர்ந்து வாழும் நமதூர் மக்களுக்காக சிறிது காலத்துலயே உருவானது.
இறைவனின் அருளால் ஏறத்தாழ 20 வருடங்களாக இதன் பணிகள் இந்த இனைய தளம் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. பல வாசகர்கள், ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். துவக்க காலத்தில் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் இனையம் வாசகர்களுக்கு செய்திகளை படிக்க தந்தது. சுவையான பல செய்திகள். அழகான கட்டுரைகள். நகைச்சுவைகள் என அனைத்து செய்திகளை தந்தது.
தனி மனித விமர்சனம் அரசியல் மதம் சார்ந்த செய்திகள் என்று இல்லாமல் அனைத்து மக்களும் வந்து படிக்கும் விதமாக இதன் நடை அமைந்துள்ளது. இதன் வாசகர்கள் தாயகத்தில் மட்டுமல்லாது பல வெளி நாடுகளிலும் படித்து வருகின்றனர். தொழில் நுட்பம் மாறும் போதும் காலத்திற்கு ஏற்றார் போலவும் இதன் தரத்தையும் மாற்றி வருகிறோம். வாசகர்களாகிய உங்கள் ஆதரவு எப்போதும்.
எல்லா புகழும் இறைவனுக்கே!