ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய
என்ன சேதி? எப்படி இருக்கீங்க?
ஊரில் இயல்பு வாழ்க்கை
கடந்த இரன்டு மூன்று நாட்களாக அதிகாலை நேரங்களில் பனி பெய்ய துவங்கியுள்ளது.
ஆகவே அதிகாலை நேரங்கள் சற்று குளிராகவே உள்ளது.
இரவு நேர வெப்ப நிலை குறைந்த பட்சமாக 23 டிகிரி வரை உள்ளது.
சமீபத்தில் இந்த வலைத்தளத்தில் கவிஞர் இஸ்மாயில் அண்ணன் எழுதியிருந்தார்.
70 வயது வரை வெட்கப்படாத மாமியார்கள் என ..ஹா ஹா..
“எழுபது வயதானாலும் மருமகனை பார்த்து வெட்கப்பட்டு மறைந்து கொள்ளும் மாமியார்” .
அதனால் தான் என்னவோ அக்டோபர் மாத நான்காவது ஞாயிறு மாமியார் தினம் என போற்றப்படுகிறது. ஆமாங்க நேற்று MOTHER IN LAW DAY அம்மாயிம்ம தினம்
‘National Mother-in-Law Day on the fourth Sunday in October honors that special woman who brought the love of your life into this world.’
அம்மாயிம்மாவுக்கு மரியாதை கொடுக்கனுமாம், நல்ல முறையில் பார்த்துகொள்ள வேண்டுமாம்.. ஹா..ஹ.. இது நம்ம ஊரில் சொல்ல வேண்டியதில்லை.
மாமியாரை கொண்டாடுவதில் மருமக பிள்ளைகள் குறை எதுவும் வைப்பதில்லை.
நேற்று மற்றொரு நாள் சொல்லவேன்டுமானால்
இந்தியாவில் புகழ்பெற்ற பாடகர் மன்னாடே நினைவு நாள்
MANNA DEY PLAY BACK SINGER
ஹிந்தி, பெங்காலி, மலையாளம் என பல மொழிகளில் 3500 பாடல்கள் பாடியுள்ள மன்னாடேவை
பழைய பாடல் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். இசை உலகில் நீங்கா நினைவாக பல பாடல்கள் .. மலையாளத்தில் செம்மீன் படத்தில் ‘மானஸ மைனே வரு..’ பாடல் பாடியதன் மூலம் தென்னிந்தியாவிலும் மன்னாடே பிரபலமானார்.
ரப்பியுல் அவ்வல் மாதத்தில் நமக்கு நினைவுக்கு வருவது நமது சங்கத்தில் ஓதப்படும் மொளலூது ஆகும் இந்த மாதத்தில் துவக்கத்தின் இருந்து 12 ராவுகள் ஓதப்ப்படும் மொளலூது இரவுகளில் பிறை 12 சிறப்பு மண்டாப்படியை நமதூரில் அப்போது இருந்த நண்பர்கள் பாஸ் & கோ. சிறப்பாக செய்வார்கள். அந்த மன்டாப்படியை கீழவீதியில் உள்ள அனைவரது வீட்டிலும் எதிர்பார்ப்பார்கள். ஒரு பாக்கெட்டில் ஜிலேபி, மைசூர் பாக்கு இரன்டும் இருக்கும். அந்த பாக்கெட்டின் மேல் பாஸ் அன் கோ நண்பர்களின் பெயர்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.
அதில் சுமார் 15 க்கும் குறையாத நண்பர்களின் பெயர்கள் இருக்கும்.
சந்தோசமான நமதூரின் காலங்கள்.. அடுத்த ஒரு சுவையான செய்திகளுடன் tea time சந்திப்போம்.