Activity

  • anwar posted an update 1 week ago

    தியாகத் திரு நாள் வாழ்த்துக்கள்
    அல்லாஹ்வின் கிருபையால் பெருனாள் நம் ஊரில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    துல்ஹஜ் பிறை பத்தாம் நாளான திங்கள் நேற்று நமதூர் பெரிய பள்ளிவாசலில் காலை 8 30 மணிக்கும் தவ்ஹீத் பள்ளிகள் சார்பாக இக்லாஸ் , அப்ரா காலை 7 மணிக்கும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் தொழுகையில் கலந்துக் கொண்டு
    பிரார்த்தனைகள் செய்தனர். ஊர் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
    அனைவருக்கும் வாழ்த்துக்களை பரிமாறினர்.
    காலை உணவாக நமது ஊரின் பாரம்பர்ய உணவுகள் புரோட்டா, இடியாப்பம்,கறியானம், வட்லப்பம், சேமியா கஞ்சி, வீடுகளில் சமைத்தனர். மதிய உணவாக சில வீடுகளில் நேற்று பிரியானி சில வீடுகளில் இன்று பிரியானி சமைக்கின்றனர்.
    இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூர்ந்து குர்பானியும் கொடுக்கின்றனர்.
    எல்லா புகழும் இறைவனுக்கே!