எல்லா புகழும் இறைவனுக்கே …
கண்ணியத்திற்குரிய மதுக்கூர் இஸ்லாமிய பெருமக்கள் அனைவர்களுக்கும் புதிய ஜும்மா பள்ளிவாசல் கட்டிட கமிட்டி நிர்வாகிகளின் ….
அஸ்ஸலாமு அலைக்கும் …
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் நமதூர் பெரிய பள்ளிவாசலில் புதிய பள்ளிவாசல் கட்டும் பணி தொடக்கம் தொடர்பாக செயற்குழு கூட்டம் நேற்று மஃரிப் தொழுகைக்கு பிறகு (24.09.19) நமது ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் TAKA முகைதீன் மரைக்காயர், ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி பொது செயலாளர் ஜனாப் PSKA ஷேக் அலாவுதீன்(சேட் ), ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி பொருளாளர் ஜனாப் லக்கி காதர் ,முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க தலைவர் ஜனாப் SSMH முகமது அலி ஜின்னா, மிப்தாஹூல் இஸ்லாம் சங்கத்தலைவர் ஜனாப் K.அப்துல் வாஹித் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் பள்ளி கட்டுவதற்காக முன்பு தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கை கீழ் கண்டவர்களின் பெயர்களில் பெயர் மாற்றம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது …
ஜனாப் TAKA.முகைதீன் மரைக்காயர்.
ஜனாப் TSM.அப்துல் காதர்.
ஜனாப் .K.அப்துல் வாஹித்.
ஜனாப். TSZ.அப்துல் கபூர்.
ஜனாப் .M.அப்துல் ஹக்கீம்.
இதில் முதன்மை கணக்குதாரராக (first account holder) ஜனாப் TAKA. முகைதீன் மரைக்காயர் அவர்களும், இணை கணக்குதாரர்களாக(joint account holders) மற்ற மூவரும் தேர்வு செய்யப்பட்டு இன்ஷா அல்லாஹ் ஓரிரு தினங்களில் வங்கி கணக்கு பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் .
இந்த செயற்குழு கூட்டத்தில் கூடிய விரைவில் புதிய பள்ளி கட்டும் பணி கிப்லா திசை குறியிடப்பட்ட அதே இடத்திலேயே ஆரம்பம் செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ..
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள் .
ஜனாப் .MSA.அப்துல் ரஜாக்.
ஜனாப். வக்கீல் ஜபருல்லா .
ஜனாப் .TAKA.காதர் மரைக்காயர்.
ஜனாப் .இன்ஜினியர் அப்துல் கரீம்.
ஜனாப் .இன்ஜினியர் இலியாஸ்.
ஜனாப் .SNA.புகாரி .
தொடுங்கள் நான் தொடர்வேன் என்கின்ற அல்லாஹ்வின் ஆணையை முழுமையாக ஏற்று , அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி கூடிய விரைவில் பள்ளி கட்டிட பணி தொடங்க இருக்கிறோம் . ஜமாத்தார்கள் அனைவரும் வெகுவிரைவில் அல்லாஹ்வின் இல்லம் கட்டி முடிக்கப்பட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதிய பள்ளிவாசல் கட்டிட கமிட்டி ,
மதுக்கூர் .
1 கருத்து
அல்ஹம்துலில்லாஹ்