Madukkur
மதுக்கூர் மஜ்லிஸ் - Madukkur Majlis

முஸ்லிம்களின் நிலையும் செய்யவேண்டியதும்

முஸ்தபா ரஹ்மானி, ரியாத் – கட்டுரையிலிருந்து பகுதி

ஓரிரு நாட்களாக சமூக வலைதளங்களில் திரும்புற பக்கமெல்லாம் போஸ்டர்கள் ஷேர் ஆகிக் கொண்டிருந்தது..

பாபர் மசூதி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்களே ஒன்று திரளுங்கள்அநீதிக்கு எதிராக ஆர்ப்பரியுங்கள்..நீதியை காக்க குரல் கொடுங்கள்..” என்று

சரி., என்ன தான் சொல்றாங்கன்னு பார்த்தாநவம்பர் 15, பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) ஆர்ப்பாட்டம் நவம்பர் 18, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), ஆர்ப்பாட்டம் *நவம்பர் 18 ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் (YMJ), ஆர்ப்பாட்டம் நவம்பர் 19,  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) ஆர்ப்பாட்டம் நவம்பர் 24,  தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) ஆர்ப்பாட்டம் இதையெல்லாம் பார்த்த எனக்கு ஒரு சந்தேகம்..

ஏன் இவுங்க எல்லாம் ஒரே நாளில், ஒன்னா சேந்து போராடாமல், ஆளாளுக்கு ஒரு நாள் போராடுறாங்கஇது ஒன்னும் மார்க்கம் சார்ந்த, கொள்கை ரீதியிலான விஷயம் இல்லையேதனித்தனியா போராடுவதற்குஇது ஒரு பொதுவான பிரச்சனை இதுலேயே ஒன்னு சேராத நீங்களா போராட்டம் நடத்தி, பள்ளிவாசலை மீட்கப் போறீங்க

என் அப்பாவி முஸ்லிம் சமுதாயமேநீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை யோசிச்சுப் பாருங்க

பாபர் மசூதியை டிசம்பர் 6-ம் தேதி இடிக்கனும்னு முடிவு எடுத்தப்போது, எத்தனையோ இயக்கங்களாக அவர்கள் இருந்ததும்அவர்களுக்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், அவர்கள் அனைவரும் டிசம்பர் 6, என்ற ஒற்றை நாளில் ஒன்று கூடினார்கள்மசூதியை இடித்தார்கள்..இன்றுஉச்ச நீதிமன்றத்தில் அவர்களுக்கு சாதகமாக எந்த ஆதாரமும்ல்லாவிட்டாலும்.., தமக்கு சாதகமான தீர்ப்பை அவர்களே எழுதிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றிருக்கிறார்கள்.. அதிகாரத்தில் இருக்கிறார்கள்..

இதற்கு மேலும் ரோட்டில் இறங்கிப் போராடுவதால், நமக்கு நியாயம் கிடைத்து விடுமா…? பிறகு, இந்தப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் எதற்கு…? ஒவ்வொரு இயக்கமும் கூட்டம் காட்டி ஓட்டுப் றுக்குவதற்கும்,  ஆதாயங்களை அடைந்து கொள்வதற்குமா ?பாபர் பள்ளியை மீட்பதற்காக யா ?.. அதை மீட்கவும் முடியாது.. இருந்தாலும் இப்படி போராட்டம் நடத்தி, கூட்டம் காட்டி  இயக்கத்தின் பலத்தை நிரூபிக்க, அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்படுகிறார்கள்..சரி, ரோட்டில் இறங்கிப் போராடுவதால் பயனில்லை. ..சட்ட ரீதியாக போராடுவோம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யலாமா..?  என்றால், அதற்கும் வழியில்லை..

இது குறித்து நான் சொல்வதை விட, பிபிசி தமிழ் (BBC Tamil) பத்திரிக்கைக்கு மூத்த சட்ட விவகாரச் செய்தியாளர் ஜெ.வெங்கடேசன் அவர்கள் கூறியதை சுட்டிக் காட்டுகிறேன்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல முடியாது. சீராய்வு மனு வேண்டுமானால் போடலாம். உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு வந்தால், அதுதான் முடிவு. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. ஆனால் சீராய்வு மனு போடலாம். ஆனால், இந்த சீராய்வு மனுக்களில் நூற்றில் 99 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

சீராய்வு மனு எப்போது தாக்கல் செய்யப்படலாம் என்றால், ஒரு வழக்கில் சில அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றால், சில அம்சங்களை தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தால் மட்டும்தான் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால், இந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, தொல்பொருள் ஆய்வின் அறிக்கைகள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆராய்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், சீராய்வு மனு தாக்கல் செய்தால் கூட உச்சநீதிமன்றம் மனுவை நிராகரிக்கலாம்.

எனவே, என்ன தான் நாம் சட்ட ரீதியாக போராடினாலும், மேல் முறையீடு செய்தாலும், மறு சீராய்வு மனு போட்டாலும், அது எல்லாம் மறுபடியும் உச்ச நீதிமன்றத்திற்குத் தான் செல்லப் போகிறது  

அங்கே, அவா தான் இருப்பாமறுபடியும், நமக்கு நீதி கிடைக்காது..பிறகு என்ன தான் வழி…? அடுத்து, நாம் என்ன தான் செய்வது..?

1. பாபர் மசூதியை நாம் இழந்து விட்டோம், அதை மீட்டெடுக்க முடியாது. மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் இது தான் நிஜம், இதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்..

2. நம் சமுதாயம் இனி வெறித்தனமாக படித்து, அரசு துறைகளிலும், அதிகார மட்டத்திலும் அங்கம் வகிக்க வேண்டும்.

ஒழுங்காக படிக்காமல், காசு, பணம் சேர்க்கிறேன் என்று வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல், நம் பிள்ளைகளையாவது படிக்க வைத்து, IAS, IPS, வழக்கறிஞர்கள், வருமான வரித்துறை, மருத்துவம், தொல்லியல் துறை, நீதிபதிகள் என்று அதிகாரமிக்க பதவிகளில் அமர வைக்க வேண்டும்.

3. இன்று நம் சமுதாயத்தில் செல்வந்தர்களாக இருப்பவர்கள், தங்களிடம் உள்ள பொருளாதாரத்தை , நம் தெருவிலேயே எத்தனையோ மாணவர்கள், நன்றாக படிக்கக்கூடிய, வசதியற்ற பிள்ளைகள் இருப்பார்கள். அவர்களை பொறுப்பேற்று படிக்க வையுங்கள்.

முஸ்லிம்கள் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு பிள்ளைகளை IAS, IPS, வழக்கறிஞர் என்று அதிகாரமிக்க பதவிக்கு படிக்க வையுங்கள். இந்த வகையில் உங்கள் பொருளாதாரத்தை செலவிடுங்கள்..

ஒரு இயக்கம் நடத்தி,  இயக்கத்தின் அடிமட்ட தொண்டன் இன்றளவும் அதே நிலையில் தான் இருக்கிறான்..  இனியாவது திருந்துங்கள்

முஸ்லிம்களே…!உங்களிடம் காசு, பணம் இருந்தால் திருடிக் கொள்வார்கள்சொத்து, பத்துக்கள் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள்..பள்ளிவாசல்கள் இருந்தால் பறித்துக் கொள்வார்கள்..படிப்பு ஒன்று தான் நம் இனத்திற்கு பாதுகாப்புஅதிகாரம் ஒன்று தான் நமக்கான ஆயுதம்அதை நோக்கி பயணிப்போம்

தீர்ப்புக்கு எதிராக ரோட்டில் இறங்கி போராடுவதை விட, தீர்ப்பு எழுதும் இடத்திற்கு நம் பிள்ளைகளை ஏற்றிவிடுவோம்..நியாயமான தீர்ப்பை நம் பிள்ளைகள் வழங்குவார்கள்..இன்ஷா அல்லாஹ்..

முஸ்தபா ரஹ்மானி, ரியாத் படித்ததில் வலித்தது?

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR