Madukkur
மதுக்கூர் மஜ்லிஸ் - Madukkur Majlis

விரைவில் பள்ளி கட்டும் பணி தொடங்கப்பட இருக்கிறது

இறை அருள் முன்னிற்க ….

அஸ்ஸலாமு அலைக்கும் …..

வல்ல நாயனின்  நற் கிருபையால் இன்று (03.10.19) காலை நமது பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் புதிய பள்ளிவாசல் கட்டிட பணி துவங்குவதற்கு ஆயத்தமாக பள்ளிக்கான திட்ட ஆய்வு ,நில அளவு ஆகியவை பொறியாளர் பிரேம் நசீர் , மற்றும் அவருடைய உதவியாளர்களால் , ஜமாத் மற்றும் இரு சங்கங்களின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடத்தப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ் …

இறைவனின் நாட்டப்படி கூடிய விரைவில் பள்ளி கட்டும் பணி தொடங்கப்பட இருக்கிறது .

கண்ணியத்திற்குரிய மதுக்கூர் இஸ்லாமிய பெருமக்களே ….
இது நமக்கு மிகவும் முக்கியமான தருணம் .
இந்த நேரத்தில் கொஞ்சம் பழமையை அலசி ஆராயும்போது
கணக்கிலடங்காத அருட்கொடைகளை அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் வாரி வழங்கி இருக்கிறான் .

40 ஆண்டுகளுக்கு முன்பு …..

கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் மழையிலும் வெயிலிலும் அல்லல்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தோம் .  அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே மாடிவீடுகள் இருந்தன .
இன்று மதுக்கூரில் எத்திசை நோக்கினும் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் ஊரை அலங்கரிக்கின்றன …

அன்று கல்வியில் மிக ,மிகப் பின்தங்கி இருந்தோம் ..
இன்று மதுக்கூரில் பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம் …

அன்று சக்காத்து , பித்ரா வாங்குவதற்கு நிறைய மக்கள் மதுக்கூரில் இருந்தார்கள் .
இன்று ஜகாத் , ஃபித்ரா வாங்கிய அந்த மக்களை ஜகாத் , ஃபித்ரா கொடுக்கும் மக்களாக மாற்றி இருக்கிறான் .

இப்படி நமது ஊர் மக்களுக்கு அல்லாஹ் செய்த அளப்பரிய அருள் கொடைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் .

அந்த மாட்சிமை பொருந்திய கருணையாளன் எல்லாம் வல்ல அல்லாஹ்வுடைய பள்ளி நமது ஊரில் பள்ளி கட்டும் பணி தொடங்கப்பட இருக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம் .

இந்த பள்ளி அல்லாஹ்வுடைய சொத்து .மதுக்கூர் வாழ் இஸ்லாமிய பெருமக்களின் சொத்து . நாம் நமது சொந்த வீட்டை கட்டும் பொழுது எப்படி எல்லாம் திட்டமிடுகிறோமோ, பொருள் செலவு செய்கிறோமோ அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

உலகாளும் இறைவனின் உத்தம தூதராய் உலகத்தில் தோன்றி நமக்கு இறை அச்சத்தை ஊட்டி ,நெறியோடு வாழ்வதற்கு வழிவகைகளை தந்த எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துவா பரக்கத்தினால், வல்ல நாயன் இந்த காரியத்தில் நம்மோடு துணை இருக்க வேண்டும் என்று துவா செய்யுங்கள் .

ஆமீன்.. ஆமீன்…. யாரப்பல் ஆலமீன் ….

ஜும்ஆ பள்ளிவாசல் கட்டிட கமிட்டி .
மதுக்கூர் .

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR