Madukkur
மதுக்கூர் மஜ்லிஸ் - Madukkur Majlis

மஹான் ஷேக்பரீத் ஒலியுல்லா காணிக்கை

புகழ் அனைத்தும் இறைவனுக்கே …

அஸ்ஸலாமு அலைக்கும் …

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மஹான் ஷேக் பரீத் ஒலியுல்லா தர்காவில்
வக்பு வாரிய அதிகாரி ஜனாப் ஹைதர் அலி மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் மேற்பார்வையில், ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் TAKA முகைதீன்  மரைக்காயர் , பொது செயலாளர் ஜனாப் PSKA ஷேக் அலாவுதீன் (சேட் ), பொருளாளர் ஜனாப் லக்கி காதர் , முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க தலைவர் ஜனாப் SSM முஹம்மது அலி ஜின்னா,மற்றும் நிர்வாகிகள், மிப்தாஹுல்  இஸ்லாம் சங்க தலைவர் ஜனாப் அப்துல் வாஹித் மற்றும் நிர்வாகிகள் , ஆகியோர் முன்னிலையில்  மஹான் ஷேக்பரீத் ஒலியுல்லா காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப் பட்டது .

மேலும்  இந்த நிகழ்வின்போது மூத்த உறுப்பினர்கள்
ஜனாப் மு.ரா. அப்துல் வஹாப், ஜனாப் ராயல் ஜபருல்லா ,ஜனாப் வசந்தம் சாகுல் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

அதில் இருந்த மொத்த தொகை ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்கள் .

மேலும் அது அல்லாமல் 13 ஆயிரம் ரூபாய்கள் 500/1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் …

(பொது தலத்தில் பகிரப்பட்டது)

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR