!!! வாழ்க வளமுடன்!!!
வாடகை கார் ஓட்டுனர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க இப்பதிவு.
இன்றைய வாழ்க்கை நிலையில் சராசரியாக அனைத்து குடும்பத்தினருக்கும்
வாடகை கார்களின் தேவை முக்கிய பங்காற்றுகிறது.
விமானநிலையம் ‘மருத்துவமனை,இன்னும் பல பல குடும்ப நிகழ்வுகளுக்கு வாடகைகார்கள் பயன்படுத்துகிறோம். அப்படி ஒரு காரியத்திற்காக வாடகை கார்களை நாம் பயன்படுத்திய பிறகு சிலர் வீடு திரும்பியவுடன் டிரைவரிடம் வண்டியின் வாடகையை கொடுத்து விடுவார்கள்.
சிலர் நாளைக்கு வாங்கி கொள்ளலாம் ‘என கூறுபவர்களும் உண்டு.
சில நேரங்களில் மருத்துவமனை சென்று வந்தவர்கள் அவர்கள் நினைத்து சென்ற செலவு ஒரு விதமாகவும் நடந்த செலவுகள்
இரட்டிபாகவும் ஆகிவிடும்
(part of life) இச்சூழலில் வாடகை அந்த நேரத்தில் கொடுக்க தாமதம் ஏற்படும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையை டிரைவரும் புரிந்து கொண்டு லேட்டாக வாங்கி கொள்கிறேன் என்று பெருந்தன்மையாக சென்றுவிடுவார்.
மறுபுறம் அரசியல் கட்சிகள் ‘அமைப்புகள் நடத்தகூடிய மாநாடு ‘ஆர்ப்பாட்டம்,போராட்டம் போன்ற சவாரிகளுக்கும் வாடகைகள் சில நாட்கள் சென்ற பின்பு தான் கிடைக்கிறது.
இதற்கு பின்னால் இருக்ககூடிய ஓட்டுனர்களின் நெருக்கடிகள் பலவகையானவை.
நள்ளிரவில் AIRINDIA EXPRESSல் பயணித்து ஊர் வந்த ஒருவர் காலையில் தருகிறேன் என்றால் ‘அவருடைய அடுத்த சவாரியாக அதிகாலையில் மீண்டும் AIRLANKA விற்கு செல்லகூடிய சவாரியாக இருக்கும் பட்சத்தில் டீசல் போடுவதற்கு சில டிரைவர்களிடம் பணம் இருக்காது. நெருக்கடிக்கு ஆளாகுவார்கள்.
முதலாளியிடமும் அந்த நேரத்தில் கேட்கவும் முடியாது. அப்படியும் கேட்டால் போன சவாரிக்கு பணத்தை கேட்டு வாங்குப்பா என கூறுவார்.
சில ஓட்டுனர்கள் டீசல் போடும் போது வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்பதற்கு சங்கோஜ படும் காரணத்தினால் அந்த இரவோடு இரவாக ஏதோ ஒன்று செய்தி பணம் தோது செய்து பெட்ரோல் பங்கிற்கு போனால் பெட்ரோல் போடுபவர் எழுந்து வருவதற்குள் போதும் போதும் என்ற நிலை ஆகி விடும். இது போன்ற பலவிதமான தர்ம சங்கடமான சூழ்நிலையில் டிரைவர்கள் நிற்ப்பார்கள்.
நாளை வாடகை தருகிறேன் என இரண்டு வாடிக்கையாளர்கள் பெண்டிங் போட்டால் போதும் மொத்தமாக LOCK ஆகி விடுவார்கள். இதனை மனதில் கொண்டு வாடிக்கையாளர்கள் வாடகை கார் ஓட்டுனர்களிடம் உபயோகப்படுத்திய அடுத்தடுத்த தினங்களுக்குள் வாடகையை கொடுத்து விட்டால்,வண்டியின் மாத( due ) தவணை சிரமமின்றி கட்டுவதற்கும் உதவியாக இருக்கும். அந்த ஓட்டுனர்களின் வாழ்க்கை சற்று மிதமாக பயணிக்கும்.
நடந்த சம்பவம்:
மதியநேரம் வீட்டை விட்டு சவாரிக்கு புறப்படும்பொழுது மனைவி கூறுகிறார் வரும்பொழுது குழந்தைக்கு பால்மாவு ஒன்று வாங்கி வர கூறுகிறார் இவரும் நம்பிக்கையுடன் ஒகே சொல்லிவிட்டு இரவு 10மணி அளவில் ஊர் திரும்பியதும்’ ஒரு சூழ்நிலையால் பண பற்றாக்குறையால் வாடிக்கையாளரும் பாதி வாடகை கொடுக்க மனமில்லாமல் காலை வந்து வாங்கிக்க தம்பி என்கிறார்
இவரும் சரியென்று தலை ஆட்டிவிட்டு நகருகிறார். வீட்டிற்கு செல்ல மனதில்லாமல் மனைவி மக்கள் நன்றாக உறங்கிய பிறகு 12 மணிக்கு மேல் வீடு சென்றார். இது போன்ற பலவிதமான சம்பவங்கள் இந்த ஓட்டுனர்களின் குடும்ப வாழ்க்கை சக்கரத்தில்
ஓட்டுனர்கள் உங்களிடம் வாடகையை அழுத்தி கேட்காததற்கு ஒரே காரணம் வாடகை முன்ன பின்ன வந்தாலும் வாடிக்கையாளர்கள் அடுத்த தடவை தொடர்ந்து நம்மை ஆதரிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான்.
ஆகவே வாடகைகாரில்
பயணிக்க கூடிய பயணிகளாகிய நீங்கள் இவர்களின் நலனையும் மனதில் கொண்டு வாடகையை இழுத்தடிக்காமல் கூடுமானவரை விரைந்து கொடுத்து ஆதரியுங்கள்.
by Mr. Jabarulla
மக்கள் நலன் விரும்பி
1 கருத்து
வசதி இல்லாதவர்கள் கூட நம் சூழ்நிலைகளை புரிந்து கொள்கிறார்கள்
வசதி படைத்த #சிலர் மட்டுமே இவ்வாறு இழுத்தடிக்கின்றனர்
வாடகை எவ்வளவு என்று நம்மிடம் மற்றும் இன்றி நாலுபெயரிடம் விசாரணை செய்கிறார்கள் அதைவிட குறைவாக நம்மிடம் வாடகைக்கு கேட்பார்கள் சென்று வந்த பிறகு அதிலும் குறைவாக தருவார்கள்
அதிலும் சிலர் அழைத்துச் செல்லும் டிரைவர்களை டீ , உணவு விசியத்தில் கண்டு கொள்வதில்லை
(நீங்கள் சொல்லியது போல தான் சில டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் செல்லும்போது பணம் கேட்க கூச்சப்பட்டு தங்களிடம் உள்ள பணத்தில் டீசல் போடுகிறார்கள் பிறகு அங்கு சென்று பசியால் வாடுகிறார்கள் )
நம்மவர்களை விட மற்ற சகோதரர்கள் டிரைவர்களின் நிலைக்கு மதிப்பு மற்றும் மரியாதை வழங்குகிறார்கள் என்பது என் கருத்து….
by Mr Abbas