Madukkur
பயணம் - Travel

திருவனந்தபுரம்

நீண்ட நாளாச்சி 
நம்ம நட்புகளையும் உறவுகளையும் பார்க்கலாம் என ஒரு பயணம்.
நமதூரில் இருந்து புதுக்கோட்டை, மதுரை வழியாக நாகர்கோவில் போய்,
சேர நாட்டின் தலஸ்தானமாகிய திருவனந்தபுரம் செல்லனும்..

மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் சென்றால்,
அங்கே 8ம் நம்பர் வரிசை சென்று நாகர்கோவில் பேருந்து கிடைக்கும். அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லனும்.
கிட்டத்தட்ட 13மணி நேரப்பயணம்

நாம் செல்லும் போது கடைசியாக தமிழக எல்லை
களியக்காவிளை வரும். அதற்கு அப்புறம் பரஸ்ஸல.
இதான் கேரளாவில் தொடக்கத்தில் உள்ள ஊர்.
அப்புறம்நெய்யாற்றிங்கரஎன போய்
கைமணம்.. பாலராமபுரம் வந்தால்
திருவனந்தபுரம் தான்..
பெயர் தான் சேர நாடாக இருந்தாலும்
அதிகம் வாழ்வது நமது தமிழினம் தான்.

கன்யாகுமரி மக்கள் நிறைய பேர் தொழில் நிமித்தம் காரனமாக புலம் பெயர்ந்துள்ளார்கள்.
தலஸ்தானம் சென்றதும் நம்மை முதலில் வரவேற்பது
தம்பனூர் பேருந்து நிலையம். இதன் எதிரே புகைவண்டி நிலையம். பத்து வருடங்களுக்கு பார்த்த அதே தம்பனூர் தான். எந்த மாற்றமும் இல்லை. அதே சர்க்காரின் பான்ட பஸ்கள்.
பிறக்கும் போதே செங்கொட்டி சிந்தாத்துடன் பிறக்கும் மக்கள்.
தனது தோழர்களை சகாவே என
அழைக்கும் பழக்கம் அவர்களுக்கு.

தலஸ்தானம் நிறைய மாற்ற்ம்
பார்க்க நமக்கே சந்தோஷம்.
ஆனால், பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லை.
அதே போல செலவுகளும் கூடுதல் இல்லை.
திருவனந்தபுரம் பண்பாட்டின் நகரம்.(culture city)
ஆகவே பெரிய கட்டிடங்கள் வர வாய்ப்பு இல்லை.
அவை எல்லாம் கொச்சினுக்கு கொடுத்து விட்டார்கள்.
அமைதியாய் அழகாய் அடக்கமாய்
பசுமையாய் ஒரு நகரம்.

நான் தங்கி இருந்த இடத்தின் பெயர் அட்டகுளங்கர.
இந்த இடத்தைப்பற்றி சொல்லவேன்டுமானால்,
அட்டகுளங்கர முழுதும் நம்ம
தமிழ் மக்கள் இல்லங்கள்.
இதன் பின்னால் இருக்கும் இடம் சாலை. (chalai)
இது முழுக்க நம்ம மக்கள்
தொழில் செய்யம் கடைவீதி.
அதே போல இதன் எதிரே கோட்டைக்ககம்.(east fort)

இது முழுக்க தமிழ் பிரமாண குடும்பங்கள்..
ஆமாங்க ஆச்சர்யம் வேண்டாம்
நான் தமிழகத்தில் கூட
இன்று வரை இவ்வளவு பெரிய
அக்ரஹாரத்தை பார்த்ததில்லை.
அன்று தான் பார்த்தேன்.
அந்த அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில்
மெஸ் (Mani Mess) ஒன்று நடக்கிறது.
சேர நாட்டு சிகப்பரிசி இல்லாமல்
நம்ம தஞ்சாவூர் அரிசியில் தமிழக சுவையுடன்
சுத்தமான ஒரு சைவ சாப்பாடு
ஒரு வெட்டு வெட்ட வேண்டுமானால் ஒரு முறை சாப்பிடுங்கள்.

அதே போலசாலையில்ஒரு பஸ் ஸ்டாப் இருக்கிறது.
இதில் இருந்து சுற்றிப்பார்க்க எங்கேயும் செல்லலாம்.
இதன் எதிரே கோட்டைக்ககம் பஸ் ஸ்டாப்.
இதில் இருந்து எங்கேயும் செல்லலாம்.

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் எனச் சொன்னால்
கோவளம் கடற்கரை, சங்குமுகம் கடற்கரை, வேலி,
மியூசியம், நேப்பியர் மியூசியம், அரண்மனை, என இப்படியே நிறைய இடங்கள்..
திருவனந்தபுரம் அருகே நெய்யார் அணை,
அதன் அருகே பொன்முடி
பொன்முடி நம்ம ஊட்டி மாதிரி மலை வாழிடம்.

குறைந்தது ஒரு 3 நாள் குடும்பத்துடன் குதுகாலிக்க
நல்ல ஊர். நல்ல பருவனிலை. எங்கே போனாலும் தமிழ் தான்.
தொழுகையாளிகளுக்கு பள்ளிகளும் குறைவில்லை.
அதே போல ஷாப்பிங் விலை மலிவு தான்.
பாலராமபுரம் கைத்தறி புடவைகள் அழகு.. அழகு..
மன சந்தோஷ்த்துடன் ஒரு இனிமையான சுற்றுலா..
நாம் சில நாட்கள் பார்த்தாலும்
நம் கண்ணைவிட்டு அகலாத
அந்த பசுமையான நினைவுகளில்
அரபிக்கடலின் அழகிய கடற்கரையும்,
அந்த பசுமையான தென்னந்தோப்புகளும்..

கலையுட நிலையமே..
கதகளி தேசமே..—–

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR