புலம் பெயர்ந்து வாழும் மதுக்கூரார்
தேராமே,
சப்கா பஸ் ஸ்டான்ட் மே,
காதர் ஹோட்டல் கே பாஸ்..
ஹா ஹா ஹா ஹா
இந்த காதர் ஹோட்டல் எங்கே இருக்கு என யாருக்கும் தெரியாது.
ஆனால் யாரையாவது சந்திக்கலாம் என்றால்
யாரையும் நாம் பார்க்க செல்ல வேன்டும் என்றால் அதற்கான MEETING POINT இடம் தான் இது.
அமீரக நகரங்களில் ஒன்றான துபாயில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இது ஒரு முக்கியமாக மக்கள் கூடும் இடமாகும்.
தேரா துபாயில் மிகவும் பிரபலமான ஒரு சாலை நையிப் ரோடு.
இந்த நையிப் ரோடு போனால் போதும் நமதூர் மக்கள் யாரையாவது சந்திக்கலாம்.
அப்போது எல்லாம் தகவல் தொடர்பு அந்த அளவுக்கு இல்லை.
கடுதாசி மட்டும் தான். சில சமயங்களில் முக்கியமான தகவல்களுக்கு தந்தி சேவை.
நமதூர் மக்கள் பர்மா, சிங்கை, மலேசியா, புருனை, மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம் மட்டுமல்லாது
பல நாடுகள் சென்று வந்தார்கள். ஆனால் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவது அமீரகத்தில் மட்டும் தான்.
அன்றையா காலங்களில் துபாய் சென்ற நமதூர் மக்கள் பஜாரில் வியாபாரம் செய்து வந்தார்கள்.
அது போல அரபி வீடுகளில் வேலை செய்து வந்தார்கள்.
பல்தியாவில் வேலை செய்தார்கள். கட்டுமான தொழில், துறைமுகம் என அப்போதைய நகர விரிவாக்கத்திலும் நமதூர் மக்கள் உழைப்பாக பங்களிப்பை செய்தனர்.
காலப்போக்கில் மொழிகள் பேசக் கற்று அலுவலகம், வங்கிகள் என வேலைக்கு செல்ல துவங்கினர்.
இப்போதைய தேராவில் நையீப் பகுதியில் நமதூர் மக்கள் அதிகமானோர் வசிக்க துவங்கினர்.
இப்போதும் நமதூர் மக்கள் தேரா பகுதியில் தான் அதிகமானோர் வசிக்கின்றனர்.
அன்றைய கால தேராவில் நையிப் பகுதியில் நமதூர் மக்கள் வசிக்கும் இல்லங்களுக்கு ஒரு பெயர் இருக்கும். ஒரு இல்லத்தில் சுமார் 15 பேர் குறையாமல் வசிப்பார்கள்.
ஒவ்வொரு இல்லத்திற்கும் ஒரு பெயர் உண்டு.
உதாரனமாக மதுக்கூர் A ரூம். மதுக்கூர் B ரூம். என இப்படியே பல பெயர்கள்.
சொந்தங்களை சந்திப்பதும், உறவுகளை கொண்டாடுவதும், விசேச தினங்களில் பார்ப்பதும் இந்த இல்லங்களில் தான்.
சந்தோசமான காலங்கள். அப்போது எல்லாம் வேலை முடிந்தால் ரூம், சொந்த சமையல். சில இல்லங்களில் பன்டாரி சமையல். அதாவது மெஸ் முறை.
அப்போது எல்லாம் மொபைல் போன் இல்லை. வீட்டு போன் மட்டும் தான். அதற்கு அப்புறம் பேஜர் வந்தது.
பேஜர் போனதுக்கு பின் மொபைல் போன். இல்லங்களில் இனைய சேவை.
இது எல்லாம் இப்போ இருப்பது தான் மக்கள் இல்லங்களை விட்டு வெளியே வருவதில்லை. சிலருக்கு சந்தோசம் இல்லை எனவும் சொல்லலாம்.
அன்றைய காலங்களில் வேலை முடிந்து வந்தால் இரவு 12 மணி வரை அரட்டை தான்.
மக்கள் பொழுது போக்கே நமதூர் மக்களுடன் சந்தித்து பேசிக்கொண்டு இருப்பது தான்.
சில உணவகங்கள் இருந்தது, மெஹ்பூப் ரெஸ்டாரன்ட், அது போல பெங்களூர்
ரெஸ்டாரன்ட்
சாம்கோ, தமிழ் உணவகம், அஜ்மீர், நஜப், முனீர் என..
நம்ம மக்கள் அதிகமாக முனீர் ரெஸ்டாரன்ட் வாசலில் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.
வாலிபால் , கால்பந்து விளையாடுவார்கள். சில இல்லங்களில் கேரம்போர்டு, சில இல்லங்களின் மாடியில் பாட்டு கச்சேரி என இப்படியே பொழுது சென்றது.
அப்போதெல்லாம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் தாயகம் வருவார்கள்.
துணிமனி வாங்குவதில் இருந்து, பெட்டி கட்டி ஊர் அனுப்பும் வரை சந்தோசமாக அனவரும் சேர்ந்து அனுப்பி வைத்தனர். நமதூர் மக்களுக்கு அது ஒரு சந்தோசமான காலங்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அந்த சந்தோசத்திற்கு காரனம் ( இல்லாதது )
செல்போன், இனைய சேவை, கடன் அட்டைகள் என சிலவற்றை இங்கே சொல்லலாம்.
இனி வரும் மக்களுக்கு இறைவன் நல் வழி தர பிரார்த்தனை செய்வோமாக!
இன்னும் பல நாடுகள் சென்று சொந்த தொழில் செய்ய பிரார்த்தனை செய்வோம்.
அமீரகத்திலும் நமது மக்கள் துபாய் மட்டுமல்லாது, சார்ஜா, அஜ்மன், ராஸ் அல் கைமா, அபுதாபி, அல் அய்ன் , உம் அல் குவைன், திப்பா, மஸாபி, கோர்பக்கான் என அனைத்து நகரங்களிலும் வாழ்ந்தார்கள்
நேற்று ஜனவரி 9 அதற்காக தான் இந்த கட்டுரை பதிவு