Madukkur
பயணம் - Travel

மிரட்டல் சுற்றுலா …

இயற்கையின் மிரட்டலுக்கு அஞ்சாமல்…
மிருகங்கள் வாழும் அடர்ந்த காட்டுக்குள்
துணிச்சலான ஒரு பயணம் …
ஒரு சில நண்பர்களுடன் திடீர் புறப்பாடு .
பேச்சலர் டூர் என்றால் கேட்கவா வேண்டும் .?.

மேற்கு தொடர்ச்சி மலையில் பூம்பாறை என்னும் மலை கிராமத்தில் இருந்து
10 கிலோ மீட்டர் தொலைவில்
படர்ந்து விரிந்து கிடைக்கும்
ஆளரவமற்ற காட்டுக்குள் ….
தங்கி இருந்த ஒவ்வொரு நிமிடங்களும்
திகில் நிமிடங்களே  …

மிருகங்களின் குரல் கேட்கும் அடர் வனத்தில்……
உலகத் தொடர்பே இல்லாமல் ஒதுங்கி இருந்த சில  நாட்கள் …

பறவைகளின் குரலோசை,
தூரத்தில் கேட்கும் வனவிலங்குகளின் சத்தம், மயில்களின் நடமாட்டம் …
மந்திகளின் சாகசங்கள் என
மயங்கிப் போய் கிடந்தோம் நாங்கள்….

சூரிய உதயமும் , சூரிய அஸ்தமனமும் மலை முகட்டில் இருந்து பார்க்க வேண்டிய சுந்தரமான காட்சிகள். 

6 டிகிரி குளிர் ஆனாலும் அசரவில்லை நாங்கள் …பெரும் மர விறகுகளால் நெருப்பு மூட்டி சுற்றிலும் அமர்ந்து குளிரை விரட்டினோம்…

இரவு உணவு சுட்ட கோழி , சப்பாத்தி குருமா என வயிற்றை நிரப்பினோம் …

கடும் குளிரில் இரவு முழுதும் கூடாரத்திற்குள் சிலரும் அறைக்குள் சிலரும் நிம்மதியான தூக்கம் ….

காலை உணவை முடித்து ஆபத்தான பாதைகளில் ஜீப்பில் சவாரி செய்து புறப்பட்ட இடத்தை வந்தடைந்தோம் .

இது ஒரு புதிய அனுபவம் …..
சந்தோசமான சவாலான ஒரு பயணம் …
ஒரே நாளில் மன உளைச்சல்கள் மறைந்து ஓடின…
உள்ளத்தில் உவகை பூத்தது …

ஊட்டி கொடைக்கானல் குற்றாலம் என
பார்த்த இடத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டு இருப்பவர்களே …

நீங்கள் துணிச்சல் உள்ளவர்களாக இருப்பின்  மனநிறைவு தரும்
இந்த பயணத்தை அனுபவியுங்கள் …

செல்ல விரும்பினால் தொடர்பு
கொள்ளுங்கள் ஆலோசனை தரப்படும் ..

K.N.M.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் ..31.05.22.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR