பிற ஊர்களை தலைமையிடமாக கொண்டு, வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு கா அண்ணாத்துரை அவர்கள் மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் மனுக்களை பெற்று முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி செயல்படுத்த உள்ளதாக பேரவையில் தெரிவித்தார். இது அதிரை நியூசில் வந்த செய்தி.
நமது சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைபடி மதுக்கூரை தலைமையிடமாகக் கொண்டு தாலுக்கா அமைத்தால் சரியாக இருக்கும், ஏன் என்றால் நமது மதுக்கூர் ஒன்றியம், நமது மதுக்கூரை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. அனைத்துக்கும் முக்கியமாக பேருந்து வசதிகள் உள்ளது. பிற ஊர்களை தாலுகாவாக்கி மதுக்கூரை அதனுடன் இணைத்தால் பேருந்து வசதி என்பதே கிடையாது, பட்டுக்கோட்டை சென்றே செல்ல வேண்டி வரும்.
அப்படி பிற ஊர்களை தாலுகாவாக்கி மதுக்கூரை அத்துடன் சேர்ப்போம் என்றால்…. மதுக்கூர், பட்டுக்கோட்டை வட்டத்துடன் இருப்பதே நல்லது. இதற்கு நமது பேரூராட்சி சார்பாக கோரிக்கை வைக்க வேண்டும்.
By
Mr Muthukumar P
( via madukkur.com WhatsApp)
(edited with permission )