கருத்துக்கள் - Opinions கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ……

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ……

 இறப்புச் செய்தி அல்ல ..

அச்சம் கொள்ளவேண்டாம் .. இறப்புச்செய்திக்கான தலைப்பு வரி இது …(head line) வபாத் அறிவிப்புகளை பார்த்த அடுத்த வினாடியே நாம் கொடுக்கும் பதிலும் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”என்கிற இந்த   வரியைத்தான் …….இந்த வரியை  பற்றிய ஒரு ஆய்வு …….

மதுக்கூர் வாட்ஸ்அப் குழுமங்களில்(groups) பயணிக்கும் கண்ணியமிகு மதுக்கூர் இஸ்லாமிய சகோதரர்களே…..

அஸ்ஸலாமு அலைக்கும் …

மவுத்து செய்திகள் வாட்ஸ்அப் குரூப்களில் பதிவிடுவது எதற்காக என்றால்

நமதூர் மக்கள்  இறப்பு செய்தியை       உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவே தவிர வேறு எந்த காரணமும் கிடையாது …

ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் செய்தியை பார்த்தவுடன் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்கின்ற பதிவை அனைவரும் பதிவிடுகிறோம் .அதுவும் பல வடிவங்களில் , ஒரு பெண் கண்ணீர் சிந்துவது போலவும் , ஒரு கண்ணில் இருந்து நீர் வழிவது போலவும் பல மாடல்களில் பதிவு செய்கிறோம் .

இது ஏன் ? எதற்காக ?. நம்முடைய அனுதாபங்களை வெளிப்படுத்துகிறோம் என்கிற எண்ணத்தில் பதிவிடுகிறோம் என்றால் நம்முடைய அனுதாபங்களை யாரிடம் தெரிவிப்பது  ?. வாட்ஸ் அப் தளத்திலா ?…அல்லது மவுத்தானவர்  வீட்டில் உள்ள சம்பந்தப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் இந்த செய்தியை படித்துவிட்டு  யார் யார் பதிவிட்டு இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க போகிறார்களா ? எனக்கு இது ஒரு அர்த்தமற்ற செயலாக படுகிறது ..இந்த பழக்கம் எப்படி தோன்றியது என்றும் எனக்கு தெரியவில்லை .

அறியாமல், சிந்திக்காமல் நானே பலமுறை பதிவிட்டிருக்கிறேன் .

அனுதாபங்களை தெரிவிக்க வேண்டும் என்றால் முடிந்தால் அவர்களை வீட்டில் சென்று நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை  சந்தித்து உங்கள் அனுதாபங்களை தெரிவியுங்கள் ..இல்லையென்றால் இறந்துபோனவர்களுக்காக இறைவனிடத்தில் துவா செய்யுங்கள் …இதுதான் இறைவனடி சேர்ந்த அவர்களுக்காக நீங்கள் செய்கின்ற ஆரோக்கியமான செயலாக இருக்கும் …

இறந்தவர் குடும்பத்தார்களுக்கும் ஆறுதலாக இருக்கும் .

ஆகையினால் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”என்று வாட்ஸ் அப் தளத்தில் பதிவு விடுவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்பதை கருத்தில் கொண்டு …..

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”என்று பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள், நிறுத்திக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்வதில் தவறில்லை என்று எண்ணுகிறேன் ..

குறிப்பு ..இந்த வரிக்கான தமிழ் அர்த்தம் …
“நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம்.அவன் பக்கமே மீளக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்.”

ஏக இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக …ஆமீன் .


K.N.M.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் …16.06.21.

கருத்து தெரிவியுங்கள்