அமீரகத்தில் விடுமுறை நாட்கள் வந்தாலே சந்தோசம் தான்.
இரவு 10 மணிக்கு மேல் எங்கள் பகுதி தேராவில் சில்வர் பேலஸ் டீ கடை வாசலில் அமர்வோம்.
அதிகாலை 2 மணி வரைக்கும் இந்த நட்புகள் அரட்டைகள் பேசிக்கொண்டு இருப்போம்.
இடையே தேனீர், கோக்டையில், புரோட்டா ஆம்லெட் சான்ட்விச், சுலைமானி, இப்படியே ஓடிக்கொண்டு இருக்கும். அந்த மலையாளிகளும் முகம் சுளிக்காமல் எங்களுடன் உரையாடிக்கொண்டு கேட்பதெல்லாம் கொடுப்பார்கள். இதில் யாரவது ஒரு நண்பர் வர தாமதம் என்றால் எங்கே அய்யாலு? என பாசத்துடன் கேட்பார்கள்.
அதுபோல குளிர்காலங்களில் ராசல் கைமாவுக்கு குளிக்கச்செல்வோம்.
அங்கே சுடுதண்ணீர் குளம் இருக்கு. ஆகவே அதிகாலையிலே எழுந்து அங்கே சென்று
இறைவணக்கம் முடித்து சுகமான ஆரோக்யமான குளியல்..
காலை 8 மணி ஆகிவிட்டால் கூட்டம் வந்து விடும். அதற்கு முன்னே குளியல் முடித்து வெளியே வருவோம்.
இப்போது அங்கே சுடுதண்ணீர் குளம் இல்லை என நினைக்கிறேன்.
அது போல புத்தாண்டு தினத்தன்று சனவரி திங்கள் முதல் திகதி ராசல் அல் கைமா நட்புகளுடன் செல்வோம். அதிகாலை குளியல் முதல் மதியம் வரை அங்கே தான் பொழுது போகும். எங்கள் ஊர் நட்புகள் உறவுகள் அனைவரையும் சென்று சந்திப்போம்.
அனைவரும் இன்முகத்துடன் சந்தோசமாக எங்களை வரவேற்பார்கள்.
விருந்தோம்பல் நல்லமுறையில் …
ராஸல் கைமா ஊர் மாதிரி, அங்கே ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய காலங்கள்….
எல்லா புகழும் இறைவனுக்கே!
திரும்பும் வ்ழியில் மாலை அஜ்மன் கடற்கரை.
சில நாட்கள் நட்புகளுடன் சுற்றுலாவும் செல்வோம்.
அதிகமாக செல்வது கோர்பக்கான் கடற்கரை.. சில நாட்கள் அல் அய்ன்,
ஓமன் சென்று வந்து இருக்கோம்.
மஸ்கட். சலாலாஹ். நிஸ்வா….
அது போல ஓமனை சேர்ந்த தீவான சிறிய பிரதேசம்..
சில விடுமுறை நாட்களில் இரவு கடற்கரை சென்று அதிகாலை வரை வாலிபால்
சில நாட்களில் பகல் நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவோம்.
சில நாட்கள் காலை முதல் மாலை வரை பூங்காவுக்கு சென்று விடுவோம்.
நாங்கள் அதிகமாக செல்வது மம்ஸார் பூங்கா தான்.
இப்படியே அமீரக விடுமுறை நாட்கள் சந்தோசமாக…