Magazine வாழ்கைமுறை - Lifestyle

நோன்பு கஞ்சி

 ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் நேரங்களில் நாம் விரும்பும் முக்கிய உணவு வகைகளில் ஒன்று. இந்த நோன்பு கஞ்சி. தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் முஸ்லிம்கள் வாழும் பல பகுதிகளிலும் நோன்பு கஞ்சி பல சுவைகளில் தயாராகிறது.

 இந்த வருடம் தொற்று நோயால் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சவில்லை என்றாலும்

 இப்போது பல வீடுகளிலும் நோன்புக்காக கஞ்சி காய்ச்சி வருகிறார்கள். குறைந்த அளவே கஞ்சி காய்ச்சினாலும் தாங்கள் இல்லாது அக்கம் பக்கம் வீடுகளுக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்து வருகின்றனர். நோன்பு திறக்கும் பலருக்கும் கஞ்சி இல்லை என்றால் நோன்பு திறந்த திருப்தியே இருக்காது. இது முழுக்க முழுக்க அரிசி , காய்கறிகளால் காய்ச்சப்படுகிறது.

 சில நேரங்களில் இறைச்சி துண்டுகள் அதாவது சிறிய துண்டுகளாக போட்டும் காய்ச்சுவார்கள். ரமலானில் மட்டும் காய்ச்சும் கஞ்சி இதன் சுவை மணம் பாரம்பர்யம் என்றும் நம்மால் மறக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமல்ல சிங்கை, மலேசியா, இலங்கை, அமீரகம், புருனை, இன்னும் நம் மக்கள் வாழும் இடங்களில் நோன்பு கஞ்சி காய்ச்சப்ப்டுகிறது. நோன்பு கஞ்சி நமது கலாச்சாரத்தோடு இனைந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்து தெரிவியுங்கள்