13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை மற்றும் அல்பரஹா குவைத் மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தான முகாம், அல்பரஹா குவைத் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
மதுக்கூர் MTCT உறுப்பினர்கள், MCC நண்பர்கள் மற்றும் மதுக்கூர் வாழ் பொது மக்கள் என சுமார் 30 நபர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
கொரோனாவின்-ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டு இருக்கும் இக்கால கட்டத்தில் இரத்தத்தின் தேவை அதிகமாக இருக்கும் நேரத்தில் அல்பரஹா குவைத் மருத்துவமனை கேட்டுகொண்டதன் அடிப்படையில் MTCT யால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என அல்பரஹா குவைத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இதேபோன்று நிகழ்ச்சிகளை நடத்தி தர MTCT நிர்வாகிகளிடம் மருத்துவனை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அவசரமாக இரத்தம் தேவைபடும் பட்சத்தில் தொடர்பு கொள்ளும்படி நமது நிர்வாகிகளின் மொபைல் எண்கள் பகிர்ந்து கொள்ளபட்டது.