வாழ்கைமுறை - Lifestyle

1970 TO 1975 காலங்களில் மீலாது விழா

இறைவனின் திருப்பெயரால்…

அன்றைய  மதுக்கூரில் 1970 TO 1975  காலங்களில்  நடைபெறும் விழாவில் மீலாது விழா மிகவும் புகழ்பெற்றது.

 இரு சங்கங்கள், ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துக் கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி மீலாது விழா ஆகும்.

 இதற்காக இரவு பகலாக பாடுபட்டவர்கள்  என கூறினால் மிக நீண்ட பட்டியல் வரும்.

 அன்றைய மதுக்கூரில் மீலாது விழா பந்தடி திடலில் தான் நடைபெறும்.

 பந்தடி திடல் என்பது கீற்றுச்சந்தை எதிரே மரப்பட்டறை, பால் பண்ணை அமைந்துள்ள இடம்.

 அன்று மீலாது காலங்களில் நமது ஊரே ஒன்று கூடி இந்த விழாவை நடத்தின.

 மரைக்காயர் குதிரை அல்லது யானை மீது அமர்ந்து இருக்க

 இரு சங்கங்களும் தப்ஸ் அடிக்க வீதி உலா.

 இந்த விழாவில் இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம், சிறப்பு பேச்சாளர்கள் அழைத்து சொற்பொழிவுகள்,

 யார் யார் வந்தது தெரியுமா?  சொல்ல வேன்டுமென்றால்

நீதிபதி மு.மு. இஸ்மாயில் கம்பன் கழக தலைவர்,

 புதுச்சேரி முதல்வர் பாரூக் மரைக்காயர்

பள்ளப்பட்டி உஸ்வத்துல் ஹசனாவில் இருந்து பேராசிரியை கமருன்னிஸா,

 பட்டிமன்ற பேச்சாளர்கள் அ.வே. ராஜகோபால், சத்தியசீலன்,

 அப்போதைய பாண்டிச்சேரி கவர்னர் என…

 பாண்டிச்சேரி கவர்னர் வந்தபோது நால் ரோட்டில் இருந்தே அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 நமதூர் மக்கள் ஊர்வலமாக வீதிகளில் நடந்து வர

 கீழவீதி சங்கம் மேலவீதி சங்கம் இனைந்து இஸ்லாமிய பாடல்கள் பாடிய படி

 தப்ஸ் அடிக்க மரைக்காயர் யானையில் அமர்ந்து ஊர்வலமாக வர

 பல தெருக்களிலும் இந்த ஊர்வலத்தை உற்சாகமாக வரவேற்க

 அன்று ஊரே சந்தோசமான விழாக்கோலம்.

மீலாது விழா பந்தடி திடலில் முதல் நாள் இரவு துவங்கும்

 முதல் நாளில் மதரஸா மாணவர்களுக்கான கிராஅத் போட்டிகள் நடைபெறும்.

 அதற்கு மறு நாள் காலையில் ஊர்வலம் துவங்கும் .

 ஊர்வலம் முதலில் மேலவீதிக்கு சென்று அதன் பின் கீழத்தெருவுக்கு வரும்.

 கீழவீதிகளில் உலா வந்து விழா நடைபெறும் பந்தலுக்கு வரும்.

 ஊர்வலம் உலா வரும் போது முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சர்பத் கொடுப்பார்கள்.

 பட்டி மன்றம் நடைபெறும் , முக்கிய பேச்சாளர்கள் பேசுவார்கள், சிறப்பு அழைப்பாளர்கள்  கெளரவப்படுத்துவார்கள். மீலாது விழா மலர் வெளியிடப்படும். அதன் பின் மாலையில்

 பெண்களுக்கான சொற்பொழிவு. இதில் தான் பேராசிரியை கமருன்னிஸா உரையாற்றுவார்கள்.

இப்படியே அன்றைய மதுக்கூரின் சந்தோசமான காலங்கள்.

 இதில் பலரது அயராது உழைப்பும் மறக்க முடியாது.

 விழாவில் கலந்துக் கொள்ள வந்து இருக்கும் முக்கிய பிரமுகரகளுக்கு மட்டும்  உணவு  ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

 இன்று போல இத்தனை வசதிகள் தகவல் தொடர்புகள் இல்லாத காலங்கள்.

 ஆனால் சிறப்பாக விழாக்களை நடத்திய ஜமாத்தார்களை பாராட்டாமல் இருக்க  முடியாது. எல்லா புகழும் இறைவனுக்கே!

புகைப்பட சேகரிப்புக்கு மதுக்கூர் கேலரி பார்வையிடவும் Madukkur Gallery

கருத்து தெரிவியுங்கள்