Madukkur
முன்னேற்றங்கள் - Developments

3,36,500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது

எல்லா புகழும் இறைவனுக்கே??️

மக்கள் கொடுத்த மகத்தான பொருப்பை – சிறப்பாக செய்து முடித்த மதுக்கூர் தமுமுக – 128 குடும்பங்களுக்கு

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான் (நூல்: முஸ்லீம் 5012)

மேற்கண்ட ஹதிஸ் அடிப்படையில் செயல்களை மிக கச்சிதமாய் இறைவன் அருளால் செய்து முடிக்கப்பட்டது.

மூன்று வருடங்களுக்கு முன்பு அருமை சகோதரர் கபார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மாபெரும் பணி.

ஏழைகள் நடுத்தர மக்கள் தங்களின் நோன்பை எந்த சிரமம்மின்றி தடையுமின்ற நோன்பு வைத்திட, கஸ்ட்டத்தில் தத்தளிக்கும் போதும் வெளியில் உதவி கேட்க கூச்சப்படும் குடும்பங்களை தேடி, ஒரு குடும்பத்திற்கு சுமார் 3000ரூ மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய கிட் கொடுக்கப்பட்டது.

2019ம் ஆண்டு 30 குடும்பங்களுக்கும்.

2020ம் ஆண்டு 62 குடும்பங்களுக்கும்.

2021ம் ஆண்டு 87 குடும்பங்களுக்கும்.

இந்த ஆண்டு 2022 முதற்கட்டமாக 50குடும்பங்களுக்கும், அதனை தொடர்ந்து 78 குடும்பங்களுக்கும் என சுமார் 128 குடும்பங்களுக்கு இறைவனின் அருளால் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்…?

மகத்தான பணிக்கு பங்களிப்பு செய்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக.

அன்பு சகோதரர்கள்,மதுக்கூர் தமுமுகவின் கழக கண்மனிகள், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை IPP சொந்தங்கள், சமூகநீதி மாணவர் இயக்கம் SMI செயல்வீரர்கள் அசராத பணியின் மூலமாக, பம்பரமாய் சுற்றி விரைவாக முடிக்கப்பட்டது.

தரமான பொருட்களை கொடுக்க வேண்டும் – சரியான ஏழைகள் கண்டறியப்பட வேண்டும் – அதனை சரியான முறையில் விநியோகிக்க வேண்டும்- விநியோகத்தின் போது பயன்பெற கூடியவர்கள் எந்த வித சிரமம்மின்றி கொடுக்கப்பட வேண்டும்- பயனாளர்களின் பெயரோ அடையாளமோ எந்த விதத்திலும் வெளியாகிவிட கூடாது, பயன் பெற கூடியவர்களின் கண்ணியம் காப்பதில் மிக முக்கிய கவனம், அத்தனை கிட்டுகளும் விநியோகம் செய்துவிடுவதில் கவனம், பெறப்பட்ட பொருளாதாரங்களை சரியான முறையில் கணக்கிடுவதில் கவனம் என அத்தனையும் கணகச்சிதமாக செய்து முடிக்கப்பட்டது.

அயராது பணி, கடுமையான உழைப்பு, நேர்த்தியான திறமையான திட்டமிடலோடு அத்தனையிலும் ஈடுப்பட்ட அருமை கழக கண்மனிகளுக்கு இறைவன் அருள்புரிய பிராத்திக்கவும்

இந்த பணியில் பொருளாதார பங்களிப்பு செய்தவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.

அனைத்து வகையிலும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மதுக்கூர் தமுமுகவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


பேரன்புகுரியவர்களே! இந்த பணியின் மூலம் பலன் அடைந்தவர்கள், பங்கு பெற்றவர்கள் அருமை சகோதரர் கபார் அவர்களின் மறுமை வாழ்கை சிறக்கவும், மதுக்கூர் தமுமுகவின் பணிகள் மேன்மேலும் சிறக்கவும் பிராத்திப்பீர்.

என்றும் மார்க்க&சமுதாய பணியில்..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக) – இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP)??️
மதுக்கூர்.
தஞ்சை தெற்கு.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR