அழகான அமீரக வாழ்வில் நம்மால் மறக்க முடியாதது இந்த ஆப்ரா என்ற நதி.
தேரா துபைக்கும் பார்துபைக்கும் இடையே இந்த நதி ஓடுகிறது.
இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல படகில் பயணம்.
அன்று ஐம்பது பைசா, இன்று ஒரு ரூபாய். சுற்றுலா பயணிகள் மட்டுமல்ல
வேலைக்கு செல்லும் நாமும் ரசித்து செல்லும் பயணம் இந்த ஆப்ரா படகு பயணம்.
மாலை நேரங்களில் அக்கரையில் ஒரு ரூபாய்க்கு மூன்று சிறிய சமூசாக்கள்.
மலையாளிகளின் கடைகளில் சாயா…
வானம் எனக்கு ஒரு போதி மரம்
நாளும் எனக்கு அது சேதி தரும்
என்ற தமிழ் கவிஞனின் வரிகள் நம்மை அறியாமல் நமது உதடுகள் பாடும்…
1 கருத்து
பார்துபை பயணங்கள் , உங்கள் எண்ணங்கள் எழுதலாம்