ஆரோக்கியம் - Health

தடுப்பூசி போடுவீர் , தொற்றிலிருந்து பாதுகாப்பீர்

மதுக்கூர் இஸ்லாமிய சமூக மக்களின் தொன்றுதொட்ட வாழ்வியல் மரணங்களில், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் புதிய மையவாடியில் “ஜனாஸா” அடக்கம் செய்ய தொடங்கபட்ட பிறகு, இச்சமூகம் இதுவரை வரலாற்றில் எந்த தலைமுறையினரும், கண்டிராத தொடர் மரணங்கள் (இறப்புகள்) இந்த 2021- ல் நிகழ்ந்திருக்கிறது.

பல குடும்பங்கள் தங்களுடைய இரத்த உறவுகளையும்,உறவினர்களையும் இழந்துள்ளார்கள். சிறியோர்கள், சகோதர,  சகோதரிகள், அம்மையார்கள்,வயது முதிர்ந்த பெரியோர்கள் என இதுவரை 93- பேர் இறப்புவிகிதம் பதிவு செய்யபட்டு இருக்கிறது.

பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய  “மதுக்கூர் வாழ்” மக்களுக்கு விழிப்புணர்வுக்காக இச்செய்தி பதியபடுகிறது.

கடந்த வருடம் 10.11.2020 முதல் இஸ்லாமியர்களின் புதிய மையவாடியில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட தொடக்கம் பெற்றது முதல், 30.07.2021  வரை.

மொத்தம் 80 நபர்கள் அடக்கம் செய்யபட்டு இருக்கிறார்கள்.

ஆண்கள் இறப்பு விகிதம் 42- எனவும், பெண்கள் இறப்பு விகிதம் 38- எனவும் இறப்பு விகிதம் பதிவுசெய்யபட்டு இருக்கிறது.

இதில் இயற்கையாக இறந்தவர்களை விட ” கொரோனா” தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இவையன்றி பிற சமுதாய மக்கள் நமதூரிலும், கிராமபுறங்களிலும், கொரோனா தொற்றால் மரணித்தவர்களை மதுக்கூர் சமுதாய அமைப்புகளான த.மு.மு.க, S.D.P.I, T.N.T.J ,போன்ற அமைப்புகளால் அடக்கம் செய்யபட்டதை நாம் அனைவரும் “சமூக வலைதளங்கள்” மூலியமாக காண முடிந்தது.

உலக சுகாதார துறையும், தமிழக அரசும் 3- வது அலை வரக்கூடும் பாதுகாப்பாக இருப்பீர் என தொடர்ந்து அறிவுறுத்திக்  கொண்டே இருக்கிறார்கள்.

தமிழக அரசும் தடுப்பூசி போடும் பணியை விரைந்து செய்து கொண்டு வருகிறது.

நமதூர் சமுதாய நல ஆர்வலரும், தி.மு.க வின் நிர்வாகியுமான H.R.அக்பர் அவர்கள் , நமதூரில் தடுப்பூசிகள் போடுவதற்கு மக்கள் ஆர்வமின்மையாக காணப்படுகிறார்கள். என வருத்தம் மேலோங்க கூறுகிறார்.

உதாரணத்திற்கு  150- தடுப்பூசிகள் வரப்பட்டால், 110 நபர்களே போட்டு கொள்கின்றனர். மீதி – 40 தடுப்பூசிகள்  அரசால் திரும்பவும் எடுத்துசெல்லபட்டு கொண்டிருக்கின்றன என வருத்தம் மேலோங்க தெரிவித்து இருக்கிறார். ஊசி போடும் முன்பிருந்த ஆர்வம் இப்பொழுது மக்களிடம் இல்லை எனவும் கவலைபட செய்தி கூறுகிறார்.

கடந்த காலங்களில் ” கொரோனாவில்” இறந்தவர்களின் வேதனைகளையும், வலிகளையும்  சற்று பொறுமையுடன் நினைத்து பாரீர்.அவசரத்திற்கு ஆக்ஸிஜன், ஆம்புலன்ஸ் கிடைக்க பெறாமை, ஒறுபுறம்.

மறுபுறம் மருத்துவமனயில் அனுமதிக்க பட்டாலும் கூடவே அருகில்  இருந்து உறவுகளால் அனுசரனையும், ஆறுதலும் சொல்லமுடியாத போன்ற கொடிய சூழல்.

2- வது அலையை பொருட்படுத்தாமல் இருந்ததன் விளைவு நிறைய உறவுகளை இழந்தோம்.

இதனை பாடமாக கொண்டு ,
அரசுக்கும், இயக்கசகோதரர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், குடும்பத்தினருக்கும் , பொதுமக்களுக்கும் ஏற்படும் தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து அவர்களுக்கு ஒத்துழைத்து தடுப்பூசியை தாங்களும் விரைந்து போட்டு தங்களுடைய குடும்பத்தார்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவுறுத்துவீர். மக்களை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய மானுட கடமையாகும்.

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்