எனதருமை நட்புறவுகளே…
இந்த கொரோனா கொடிய காலத்தில் இவ்விரு வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவோம்.
சுய கட்டுப்பாடு (Self Control)
தமிழக அரசு, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் என இவையாவும் நமக்கு சொல்வது தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிந்து கொள்வது, அத்தியாவசிய காரணம் தவிர்த்து வெளியில் செல்லாமலிருப்பது, அப்படி வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்வது,
வெளியில் சென்று வீடு திரும்பியதும் கை மற்றும் முகத்தினை நன்றாக சோப்பு போட்டு கழுவிக்கொள்வது என இன்ன பிற ஏனைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறது. இதனை கொரோனாவிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு நாமே விதித்துக்கொள்ள வேண்டிய சுய கட்டுப்பாடுகள்.
சமூக பொறுப்புகள் (Social Responsibilities)
சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், நன்மை தீமைகள் இவற்றிற்கு தனிப்பட்ட ஒவ்வொருவரின் சமூக பொறுப்புகளுக்கான சிந்தனையும் அதை சார்ந்த நடவடிக்கைகளும் மிக முக்கியமான காரணமாக அமைகிறது.
இந்த கொரோனா காலத்தில் மேலே குறிப்பிட்டிருக்கும் சுய கட்டுப்பாடுகளை மறந்து செயல்படுவதனால் ஒருவருக்கு ஏற்படும் தொற்று அவரது குடும்பத்தினர், தெரு ஊர் என சங்கிலித்தொடராக மாறிபோய்விடுகிறது
எனவே நாம் அனைவரும் நமக்கான சுய கட்டுப்பாட்டுடன் நமக்கான சமூக பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு ஏக இறைவனின் துணையோடு கொரோனா எனும் இக்கொடிய நோயிலிருந்து விடுபடுவோம். இது நம் அனைவரது கடமை .
கொரோனாவிற்கான தடுப்பூசி அரசு சார்பாக செலுத்தப்படுகிறது, அனைவரும் தனிமனித இடைவெளியோடு தடுப்பூசி செலுத்திக்கொள்வோம், கொரோனாவிலிருந்து நம்மை காத்து கொள்வோம்.
By:
மதுக்கூர் ரஹ்மானியா ஹபீப்