Madukkur
ஆரோக்கியம் - Health

மழையும் ஆரோக்கியமும்

சில மாதங்களுக்கு முன்னர் நாம்  அனைவரும் தாங்கிய வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் வகையில் மழைக்காலம் வந்துள்ளது. இறைவனுக்கு  நன்றி, நாம் இப்போது அடிக்கடி மழைபொழிவுகள் காண்கிறோம். இது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், இந்த மழைகாலத்தை ரசிப்பதற்கு நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதும் அவசியம். இந்த மழைகாலம் தொடர்பான உடல்நல பாதிப்புகள் மற்றும் நமது வீட்டில் அடிப்படை மருந்துகளின் தேவை குறித்து பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகையின் யோசனை.

நாம் ஒரு நல்ல சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வழக்கத்தை பின்பற்றினாலும், வானிலை மாற்றத்தின் தன்மையும்  சூழலையும் சில பொதுவான தொற்றுநோய்களுக்கு நம்மை ஆளாகிறது.

மழைக்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் பொதுவான நோய்கள்: காலரா, ஹெபடைட்ஸ் ஏ, இன்ஃப்ளூயன்ஸா, லெப்டோஸ்பிரோசிஸ், டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு, சிக்குன்குனியா, டைபாய்டு, ஜலதோஷம், மின்னதிர்ச்சிகள் மற்றும் சாலை போக்குவரத்து விபத்துக்கள்.

ஆகயால் இந்த காலநிலையில் அடிக்கடி காய்ச்சல், மூக்கடைப்பு, உடல் வலி மற்றும் தளர்வான மலம் இருப்பது ஆச்சரியமல்ல.

இந்த நோய்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் அதற்கான பொருத்தமான சிகிச்சை தேவைப்பட்டாலும், மருத்துவரைச் சந்திக்கும் வரை இந்த சூழ்நிலைகளைக் கையாள சில அடிப்படை மருந்துகள் நம் வீட்டில் இருப்பது அவசியமாகும்.

நீங்கள் மருத்துவமனையை அடையும் வரை உங்கள் நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவதற்கு , இங்கே சில மருந்துகளின் பட்டியலை முன்வைக்கப்பட்டுள்ளது, , பொதுவாக இந்த மருந்துகள் எல்லா பருவநிலையிலும் உங்கள் மருந்து பெட்டியில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றன.

 • அசிடமினோஃபென் (eg. டேப்லெட் பாராசிட்டெமால்) – காய்ச்சலுக்கு: 1 மாத்திரை 4- 6 மணிநேர இடைவெளி
 • NSAID கள் (eg. டேப்லெட் நாப்ராக்ஸன்) – உடல் வலிக்கு 1 மாத்திரை 4- 6 மணிநேர இடைவெளி
 • அல்ர்ஜிக்கான மருந்துகள் (eg. பெனாட்ரில் சிரப் ) – அலர்ஜி, மூக்கடைப்பு, அரிப்பு, தும்மல், வறட்டு இருமல் – 5 – 10 ml 6 மணிநேர இடைவெளி
 • அமில நீக்கி (eg.முக்கெய்ன் ஜெல் சிரப் ) – அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் – உணவுக்கு முன்
 • காயம் களிம்புகள் (eg. நியோஸ்போரின் கிரீம்) – காயங்கள் வெட்டுக்கள்
 • கட்டும்துணிகள் / பிளாஸ்டர் – வெட்டுக்கள் மற்றும் காயங்கள்
 • நாசி நிவாரணிகள் ( eg.நாசோவியன் மூக்கு தெளிப்பு) – மூக்கடைப்பு, தும்மல்
 • வாந்தியடக்கிகளில் (eg. டேப்லெட் எம்மீஸ்ட்) – வாந்திக்கு 1 மாத்திரை 4- 6 மணிநேர இடைவெளி
 • தளர்வான மல மருந்துகள் (eg.டேப்லெட் லோபராமைடு) – தளர்வான மலத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்த 1 மாத்திரை 4- 6 மணிநேர இடைவெளி
 • மலமிளக்கிகள் (eg. லாக்டூலோஸ் சிரப் ) – இரவில் மலச்சிக்கலுக்கு 10 முதல் 15 மில்லி வரை உதவும்
 • கண் மருந்துகள் (eg. சிப்லாக்ஸ் டி  கண் சொட்டுகள்) – கண் வலி அரிப்பு சிவப்பைத் தடுக்க கண் தொற்றுகள் 2 சொட்டு ஒவ்வொரு கண்களிலும் 6 மணிநேர இடைவெளியில்
 • தசை தளர்த்திகள் (eg. வோலினி ஜெல் / ஸ்ப்ரே ) – சுளுக்கு, தசை வலி, பிடிப்புகள்
 • ஆண்டிசெப்டிக் (eg. டெட்டோல் முதலுதவி திரவ ) – காயம் சுத்தம் செய்வதற்கு
 • அலர்ஜி கிரீம் (eg. ஹைட்ரொகார்டிசோன் கிரீம் ) – தோல் அல்ர்ஜி கிரீம்

மேற்கூறியவை, மருத்துவரை சந்திப்பதற்கு மாற்றாக இல்லை. ஒன்று அல்லது இரண்டு நாட்களில் உங்கள் அறிகுறிகள் அல்லது உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று தேவையான விசாரணைகளைச் செய்து உங்கள் நிலையை கண்டறிந்து உங்கள் சிகிச்சையை இன்னும் குறிப்பிட்டதாக குறிவைக்கவும். நீங்களே சுயமாக அன்டிபையோட்டிக்ஸ் உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் உடலில் ஆண்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் ஏற்படுத்தக்கூடும், பிறகு இதனால் உங்கள் பிற்கால வாழ்க்கையில் எளிமையான நோய்த்தொற்றுகளுக்கு கூட அதிகமான அன்டிபையோட்டிக்ஸ்  எடுக்கும்படி கட்டாயமாகிவிடும் .

இந்த மழைக்காலத்தில் நாம் கவனிக்க வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகள் பின்வருமாறு:

1. மழையில் நனைவதை தவிர்க்கவும்

2. வேகவைத்த அல்லது வடிகட்டி   தண்ணீர் போதுமான அளவு குடிக்கவும்

3. கொசு விரட்டும் நடவடிக்கைகளைப் பயன்படுத்துங்கள்

4. உங்கள் வீட்டுக்குள் ஈரப்பதம் இருக்க வேண்டாம்

5. உங்கள் கண்களை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும்

6. தூசி மற்றும் மழை தூறல் பட்ட உணவு தின்பண்டங்களை தவிர்க்கவும்

7. உணவுக்கு முன் கைகளை சரியாக கழுவ வேண்டும்

8. ஈரமான ஆடைகளைப் பயன்படுத்த வேண்டாம் (மழையில் ஈரமாகிவிட்டால் மாற்றவும்)

9. சாலையோர மழை நீரில் நடப்பது காலில் பூஞ்சை (ஃபங்கஸ்) தொற்றுக்கு வழிவகுக்கும், உங்கள் கால்களைக் கழுவி, பின்னர் ஈரப்பதம் இல்லாமல் அவற்றை வைத்திருங்கள்

10. மழையில் நனைந்தால் வெதுவெதுப்பான நீர் குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்

11. மின்சார பொருட்களை கவனமாகப் பயன்படுத்துங்கள்

12. மெதுவாகவும் பாதுகாப்பாகவும் ஓட்டுங்கள்.

13. உங்களுக்கு ஆஸ்துமா, அல்ர்ஜி ,சைனஸ் பிரச்சினைகள், ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம் ஆகியவற்றை இருந்தால் மழையில் வெளிப்படுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது தாக்குதலை அதிகரிக்கச் செய்யும்

இறைவன் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்..

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR