இரண்டாவது அலை என்ற பெயரில், கோவிட் 19 நோய்த்தொற்று அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிகின்றோம்.
நமது மாவட்டத்திலும் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வருகின்றன, மேலும் ஆக்ஸிஜன் சப்ளை உள்ள படுக்கைகளுக்கு அதிக தேவை இருப்பதாக தெரிகிறது. வட மாநிலங்களில் நிலைமை மோசமான நிலையில் உள்ளதைக் காணமுடிகிறது.
முந்தைய அலையுடன் ஒப்பிடும்போது, நோயினால் பாதிப்படைந்த சிலருக்கு- அதிக ஆக்ஸிஜன் , மருந்துகளின் அளவு மற்றும் டிஸ்சார்ஜிக்கு பின் மறு சேர்க்கையின் தேவைகளை காணமுடிகிறது.
தடுப்பூசி போடப்பட்டாலும் அல்லது இன்னும் தடுப்பூசி போடாவிட்டாலும், முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை காப்பதும் இன்னும் காலத்தின் தேவை.
வரும் முன் காப்பதே சிறந்தது !
கோவிட் 19 நோய்த்தொற்று, சாலை போக்குவரத்து விபத்துகளுடன் ஒப்பிடலாம். சாலையில் பல வாகனங்கள் செல்கின்றன, ஆனால் தோராயமாக 6% மட்டுமே அபாயகரமான சாலை விபத்துக்களை சந்திக்கின்றன , அவை பெரும்பாலும் எதிர்பாராதவை! இது போன்ற நிகழ்வுகளின் விளைவாக, குடும்ப உறுப்பினர்களின் உடனடி இழப்பு மற்றும் நிதி பின்னடைவுகள் ஏற்படுகின்றன. கோவிட் 19 உடனான சூழ்நிலைகள் இதேபோல் உள்ளது, பெரும்பாலான நோயாளிகள் குணமாகிவிட்டாலும், எந்த % சதவீத மக்கள் நோயின் காரணமாக இறப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை நாம் கணிக்க முடியாது.
முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், நம் வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து ஏர் பேக் வைத்திருப்பது போன்றது .. பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
எனவே மீண்டும் நினைவுகொள்வோம், வரும் முன் காப்பதே சிறந்தது !