நமதூரில் கடந்த 15 நாட்களாக ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம் நமதூர் பெரிய பள்ளிவாசல் அருகே நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்கின்றனர். இதில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் வழக்கறிஞர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
இதன் 15வது நாளான நேற்று உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஆண்கள் பெண்கள் என சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்தப் பேரணி TNTJ பள்ளிவாசல் அருகே தொடங்கி, முக்கூட்டுச்சாலை, கடைத்தெரு வழியாக, பெரிய பள்ளிவாசல் வந்தது. நேற்றைய தினம் இந்தப் போராட்டத்தில் த மு முக, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.