புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே ..
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்…..
எல்லாம் வல்ல ஏக இறைவனின் மாபெரும் கருணையால் ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இறங்கும் புனித இரவை தேடும் ரமலான்
27ஆம் கிழமை இரவு அன்று முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கம், மிஃப்தாஹுல் இஸ்லாம் சங்கம் இவைகளின் “முறை வழங்கல்”நிகழ்ச்சி நமதூர் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள, நிஸ்வான் மண்டபம் ,
கதீஜா மண்டபம் மேலும் பெண்கள் தராவீஹ் தொழுகை நடத்திய அனைத்து இடங்களிலும் சஹர் உணவு நிகழ்ச்சி சிறப்பான முறையிலே நிகழ்ந்தேறியது . அல்ஹம்துலில்லாஹ் .
இந்த முறை இரண்டாவது ஆண்டாக
நமதூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி,
முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கம் ,
மிஃப்தாஹுல் இஸ்லாம் சங்கம் ஆகிய நிர்வாகங்களோடு இணைந்து, இணங்கி பயணிக்கும் கடந்த ஆண்டில்(2021) தொடங்கப்பட்ட அமீரக (UAE)”லைலத்துல் கத்ர் இரவு சஹர் உணவு வசூல் கமிட்டி” நிர்வாகம் மிகவும் கண்ணியமான முறையில் வசூல் செய்து அனுப்பியிருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் .
இறைவன் அருளால் இருபத்தி ஏழாம் நாள் சஹர் உணவு நிகழ்ச்சியை மதுக்கூரில் சிறப்பாக நிறைவேற்றிய நமதூர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கம் ,மிஃப்தாஹுல் இஸ்லாம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும் ,
முழு ஒத்துழைப்பு நல்கிய ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகிகளுக்கும் ,மேலும்
அமீரகத்தில் (UAE) ரமலான் நேரத்தில் எந்தவித சிரமமும் பாராமல் முயற்சிகளை மேற்கொண்டு
வசூல் செய்து அனுப்பிய லைலத்துல் கதர் இரவு சஹர் உணவு வசூல் கமிட்டியின் நிர்வாகிகள், அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்கள், மற்றும் நிதி கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்திய அமீரகம் வாழ் மதுக்கூர் நன்மக்கள் இவர்கள் அனைவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான நற்கூலிகளையும் ,நீண்ட ஆயுளையும், மீண்டும் ,மீண்டும் ரமலானை சந்திக்கின்ற பாக்கியத்தையும் வழங்கி அருள எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கையேந்தி துவா செய்கிறோம்.
ஆமீன் ..ஆமீன் ..யாரப்பல் ஆலமீன் ..
இப்படிக்கு அன்புடன்…..
K.N.M.முகம்மது இஸ்மாயில்.
M.முத்து முகம்மது. P.S.K.A.ஜஹான்.
T.S.M.ஜாஹிர் .
A.M.அஷ்ரப் அலி.
மதுக்கூர் …05.05.22