கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

மீண்டும் ஒரு நினைவூட்டல் ….

மீண்டும் ஒரு நினைவூட்டல் ….

கண்ணியம் நிறைந்த மதுக்கூர் இஸ்லாமிய பெருமக்களுக்கு என் இதயம் மலர்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் ..

நமது ஊர் ஜும்மா பள்ளி கட்டுமானப்பணிகள் ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ..

ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி மற்றும் புது பள்ளிவாசல் கட்டிட கமிட்டி நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஆத்ம திருப்தியோடு  அர்ப்பணித்துக் கொண்டு இந்த பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் . அதற்கான நற்கூலிகளை ஏக இறைவன் இவர்களுக்கு வழங்கி அருள  வேண்டும் என்று துவா செய்கிறேன்.

அல்லாஹ்விற்காக ,
அல்லாஹ்வின் ஆணைப்படி,
அல்லாஹ்வின் பள்ளிக்காக,
அல்லாஹ் தந்த செல்வத்தை,
அல்லாஹ்வின் அடியார்கள்,
அல்லாஹ்விற்காக நிதி எனவும்,
அல்லாஹ் அருளாளன் எனவும்
அல்லாஹ் மீது அன்பு கொண்டு ……

நமதூர் பெருமக்கள் ….
தம்மிடம் இருப்பதை …
கிள்ளிக்கொடுக்காமல்
அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார்கள் …
அல்ஹம்துலில்லாஹ் ..

எவர் ஒருவர் ஒரு நன்மையை கொண்டு வருகிறாரோ அதேபோன்று அவருக்கு பத்து மடங்கு கிடைக்கும் . (அத்தியாயம் 6
வசனம். 160 அல்குர்ஆன்)

இந்த இறைவசனத்தின் அடிப்படையில் நமதூர் பெரிய பள்ளிவாசலுக்கு நாம் அனைவர்களும் வாரி வழங்கும் நிதிகள் 10  மடங்கு லாபம் மட்டுமே தரக்கூடிய இறைவனோடு நாம் செய்யும் ஹலாலான வியாபாரம் ஆகும்.

கொடுங்கள்.. கொடுப்பான்.. என்கிற வார்த்தைகளை தாரக மந்திரமாக ஏற்று

அல்லாஹ்வின் பள்ளிக்காக தாராளமாக தாமதமின்றி தங்களுடைய பங்களிப்புகளை வழங்கி அல்லாஹ்வின் ரஹ்மத்துகளை அளவின்றி அடைந்து வாழ வேண்டுமாய் மதுக்கூர்  இஸ்லாமிய சொந்தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

KN M. முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .
05.08.21.

கருத்து தெரிவியுங்கள்