Madukkur
பொது செய்தி - General

Ramadan Kit – Contributions Welcome

ரமலான் கிட் என்னும் சிறப்பான பணியை துவங்கி வைத்தவர் சகோ கபார் அவர்கள் அண்ணனின் மறுமை வாழ்வுக்கு பிராத்திப்போம்.. ஏழைக்களுக்கு நோன்பு வைக்க மிக பெரும் உதவியாக இருக்க கூடிய இப் பணியில் பங்களிப்பு செய்வீர்.

அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்

ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உணவளித்து உங்களுடைய இந்த ரமலானை பயனுள்ளதாக ஒர் அறிய வாய்ப்பு..

ஏழைகளுக்கு உதவும்.. ரமலான் கிட்

ஒரு கிட் பங்களிப்பு செய்ய.. ரூபாய் 3000/- மட்டுமே

மதுக்கூரில் கடந்த 2019ம் ஆண்டு 32 குடும்பங்களும்,
2020ம் ஆண்டு 62 குடும்பங்களும்,
2021ம் ஆண்டு 87 குடும்பங்களும் பயனடைந்துள்ளனர்.

இந்த மகத்தான பணியில் தாங்களும் பங்களிப்பு செய்வீர்.

9943145503 – 9688885675 – 9715872190 – 9597771520

அன்புள்ள ஈமானிய சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…!

? ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உணவளித்து உங்களுடைய இந்த ரமழானை பயனுள்ளதாக்க ஓர் அரிய வாய்ப்பு…

( அருமை சகோதரர் கபார் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டம்)

(நோன்பு வைக்க முடியாதவர்கள் பகரமாக இதற்கு உதவிகள் செய்யவும்)

? *3000/- ரூபாயில் ஒரு குடும்பத்துக்கு ரமழான் மாதம் முழுவதும் உணவளிக்க முந்துங்கள்…

? அல்லாஹ் கூறுகிறான்:
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல் குர்-ஆன் 2:274)

? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஜைத் இப்னு காலித்(ரலி) அறிவிக்கின்றார்கள், யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிக்கிறாரோ, நோன்பு வைத்தவரின் நன்மையில் எதையும் குறைத்துவிடாமல் அதே போன்ற நன்மை உணவளித்தவருக்கும் கிடைக்கும்.
(திர்மிதீ 807, இப்னு மாஜா 1746, தரம்: ஸஹீஹ்)

? நீங்கள் வழங்கப்போகும் உணவுப்பொருட்களில் சில:
1 அரிசி
2சர்க்கரை
3 எண்ணெய்

  1. பேரிச்சை
  2. துவரம் பருப்பு
    6.கடல்பாசி பாக்கெட்
    இன்னும் 10 விதமான பொருட்கள்…

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
(அல்குர்ஆன் : 2:184)

பங்களிப்புக்கான கடைசி நாள்: 28-3-2021
இன்ஷா அல்லாஹ்..

? உங்களால் முடியுமான பங்களிப்புகளை வாரி வழங்கிடுவீர்..

? எங்களை தொடர்பு கொள்ள:

ஃபவாஸ் : 9943145503

முகம்மது சேக் ராவுத்தர் :9715872190

ராசிக் அகமது : 9688885675

தாஜுதீன் :9597771520

(சென்ற வருடம் நமது இப்பணியின் மூலம் 2,60,000 ரூபாய் மதிப்பில் நமதூரை சார்ந்த நோன்பு நோற்க்ககூடிய சுமார் 87 ஏழை எளிய குடும்பங்கள் பயனடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

? இவண்:
*தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். ( தமுமுக) மற்றும் (IPP) இஸ்லாமிய பிரச்சார பேரவை.
மதுக்கூர் பேரூர் கழகம்.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR