தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியதிலிருந்தே
நமது ஊரிலும் இறைவன் கிருபையால் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த அக்டோபர் மாதத்தில் நல்ல மழையை நமது ஊர் பெற்று இருக்கிறது.
கடந்த இரன்டு நாட்களாக நல்ல மழை. முதல் இரவில் நல்ல மழையும்,
நேற்று மதியம் 3 மணி முதல் தொடர்ந்த மழை இரவு வரை நல்ல மழையை தந்தது.
இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சற்று நேரத்துக்கு முன் நல்ல மழையை தந்தது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தாலும், பள்ளிகள் விடுமுறை இல்லை.
வழக்கம்போல நமதூரில் அனைத்து பள்ளிகளும் நடைபெறுகிறது.