Madukkur
Magazine

இனிதாய் நிறைவேறியது இறைஇல்ல நிகழ்ச்சி (Mr.  மொஹமட் மொஹிதீன் அனுப்பிய கட்டுரை )

இனிதாய் நிறைவேறியது இறைஇல்ல நிகழ்ச்சி (Mr.  மொஹமட் மொஹிதீன் அனுப்பிய கட்டுரை )

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

இனிதாய் நிறைவேறியது இறைஇல்ல நிகழ்ச்சி.

மதுக்கூரில் 9வது இறை இல்லமான மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நிர்வாகத்தினால் மேல சூரியத்தோட்டம் (அம்மா குளம் மேல்கரை அருகில்) கட்டி முடிக்கப்பட்ட Masjid Hasan Essa Alnuaimi நேற்று 18/08/2019 மகரிப் தொழுகை முதல் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மகரிப் தொழுகையின் பாங்கினை மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் சகோதரர் PSKA ஜியாவுதீன் அவர்கள் கூறினார்கள்.பள்ளியினை வக்ப் செய்து சகோதரர் M கபார் அறிவிப்பு செய்தார். முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சகோதரர் மு.ரா.அ.ஆஷிக் ரஹ்மான் அவர்கள் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்கள்.மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் சகோதரர் NMSஅப்துல் காசிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் நிர்வாக தலைவர் SM ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.மஸ்ஜித் இஃலாஸ் பள்ளியின் தலைமை இமாம் மெளலவி நியாஸ் பிர்தெளஸி அவர்கள் துவக்க உரை நிகழ்த்த, புதிய இறை இல்லத்தை வடிவமைப்பு செய்து கட்டி முடித்த பொறியாளர் முகம்மது இலியாஸ் அவர்களை அமீரக சகோதரர்கள் அலிசாபர்,அப்துல் ஜாபர், நத்தர்ஷா,இஸ்லாமுதீன்,சாகுல் ஹமீது ஆகியோர் கெளரவித்தார்கள்.இறுதியாக காயல்பட்டிணம் ஆயிஷா சித்திக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் மெளலவிஅப்துல் மஜீது மஹ்ளரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் சகோதரர் MSM அப்துல்லா அவர்கள் நன்றியுடன் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.

இறை இல்ல திறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் முகைதீன் மரைக்காயர்,மதுக்கூர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள்,அதிமுக ஒன்றிய செயலாளர் சகோதரர் துரை.செந்தில்,திமுக ஒன்றிய செயலாளர் சகோதரர் ஆர்.இளங்கோ,முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.ஆனந்தன்,சகோதரர் அருணாகிரி,சகோதரர் ஜேம்ஸ், ஜமாத்தார்கள்,இளைஞர்கள்,மாணவர்கள்,பெரும் திரளாய் தாய்மார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியினை மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்கள் சிராஜ்,ராவுத்தர்ஷா,முனாப்,சேக் ராவுத்தர்,முஜிபுர் ரஹ்மான்,நிசார் அகமது,ஃபவாஸ்,அப்துல் காதர்,பொருளாளர் தாஜுதீன்,அஃலம்,முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது,அக்பர் அலி,சாகுல் ஹமீது,நஜீர் அகமது, மற்றும் நிர்வாக குழு,செயற்குழு,மாணவர் குழு, உறுப்பினர்கள்,ரகீபாக்கள், ஒருங்கினைப்பு செய்தார்கள்.

அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நிறைவேறியது.

அல்ஹம்துலில்லாஹ்.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR