பொது செய்தி - General

மதுக்கூரில் நடந்த சிறுபான்மையினரின் கருத்து கேட்பு கூட்டம்

கடந்த 31ஆம் தேதி டிசம்பர் மாதம் மதுக்கூரில் திமுக கழகத்தின் சார்பில் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்துகள் பறிமாற்றம் செய்யப்பட்டன. கூட்டத்தில்  ஜனாப் ஹாஜி M. முஹம்மது இஸ்ஹாக்,M.B.A.  அவர்கள் கலந்துகொண்டு திமுக கழகம்,   த.மு.மு.க , ம.ம.க, டி.என்.டி.ஜெ ,  எஸ்டிபிஐ , தமிழ்நாடு முஸ்லீம் லீக், இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் மற்றும் உலமாக்கள் சபை. ஓவைஸி போன்றவர்களை அழைத்து பேச்சு வார்த்தைகள் செய்ய வேண்டும் , இந்த சமூகத்திற்கு குறைந்தபட்சம் 20 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தனது கருத்தை பதிய வைத்தார்கள். .இதற்கு பதிலளிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் பெண்கள் மகளிர் அணியில் துணை செயலாளர் திருமதி பவானி ராஜேந்திரன்  அவர்கள் இந்த கருத்தை தலமைகழகத்துக்கு  எடுத்துச் செல்வதாக தனது பேச்சில் குறிப்பிட்டார்கள். இன்றைய பத்திரிகை செய்தியில் திமுக சார்பில் சிறுபான்மையினர் அணியின் அரசியல் மாநாடு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது என வெளியாகியுள்ளது (படம் இணைக்கப்பட்டுள்ளது). நல்லதொரு முடிவு வரும் என இஸ்லாமிய சிறுபான்மையினர் ஏதிர்பார்த்துள்ளார்கள்.

கருத்து தெரிவியுங்கள்