Madukkur
'80s '90s madukkur

மதுக்கூர் மான்செஸ்டர் ‘ தொழில்நிறுவனம்

80ஸ் & 90ஸ் மதுக்கூர் மான்செஸ்டர் தொழில்நிறுவனம்

இந்த சந்தைமண் கள்ளகபடமற்ற பல புண்ணிய ஆத்மாக்களின்  காலடிபட்டமண் . வியாபாரிகளாகட்டும் ‘ வியாபாரம்செய்த” கொடுத்தமக்களாக இருக்கட்டும் ‘ வேலை செய்த தொழிலாளிகளாகட்டும்  இரத்தமும்நகமும்  சதையுமாக பிண்ணிபிணைந்துமனிதநேயத்துடனும்’சகோதரத்துடனும் “நேர்மையுடனும் அன்பை போதித்து  வாழும்  வாய்ப்பைஅனைவருக்கும் ஏற்படுத்தி கற்றுக் கொடுத்து வாழவழிவகுத்ததே* இந்தசந்தையின் மிகபெரியசிறப்பு .

விற்பவரும் ‘ பெரும்லாபம் நோக்கு இல்லாமல் ” மனிதர்களின் முகமலர்ச்சிக்காக வியாபாரம் செய்த புனிதவாண்கள் ‘ மகான்கள்; முதலாளிகளின் முன்னேற்றத்திற்குமிகமிக விசுவாசமாக வேலை செய்த “அனைத்து கூலி தொழிலாளிகளும்” பலதரபட்டசரக்கு வியாபாரிகளும் ‘ மக்களும் சந்தையிலயே வாழ்ந்து உறங்கி  நடமாடிய ஓய்வறியாத இந்த மண்காலத்தின் வளர்ச்சியினால்  ஓய்வுஒன்றே வேலையாக   கொண்டுள்ளது.மீண்டும் மதுக்கூர்சந்தைமடைதிறந்த வெள்ளம் போல்”செழித்து பரபரபரனு பூஞ்சோலை போல் செழித்து ‘பூத்துகுலுங்கி

உயிர்பிக்கணும் என்பதே நிறைய நெஞ்சங்களின் (ஆன்மக்களின்) ஏக்கமாகவும் ‘ ஆசையாகவும் இருக்கிறது .

பல எண்ணற்ற ‘ கணக்கற்ற புத்திசாலிகளையும் ‘ திறமைசாலிகள் ‘ இந்தமண்ணில் இருந்தும்  நமதூர்சந்தை தன்னை  மாய்த்து கொண்டது ஏனோ?  இந்த தலைமுறையினர் ‘இன்றைய சூழலில்  தற்போது மிகபெரிய சவாலை எதிர்நோக்கி *காத்திருக்கின்றனர் .

கஸ்தூரிஜவுளி ஸ்டோர்முதல் நம்நாடு சில்க்ஸ்வரை வியாபாரத்தில் மதுக்கூர் வரலாற்றில் கொடிகட்டி பறந்து பிறரை திரும்பி பார்க்க வைத்ததொழில்  நிறுவனங்கள் வியாபாரிகள்  இன்று நீங்கள் வீடுகளுக்கெல்லாம் கொடுத்து கொண்டிருக்கும் . 100ரூபாய் காய்கறி புட்பேக் ‘ 80ஸ் ‘ 90ஸ்களில்  2ரூபாய்க்கு மஞ்சள் பைநிறைய முழுமையடைந்து கொத்தவரங்காய் பைக்கு வெளியே தலையை எட்டி எட்டிபார்க்கும் .

இன்றைய இளம்தலைமுறையினர் ‘நீங்கள் நம்முன்னோர்கள் கடந்து வந்த நமதூர் பாதையை பற்றி  தெரிந்து கொள்ளுங்கள் .

செவ்வாய்க்கிழமை சந்தைகளில் முசிறி 32 கிராமம் உட்பட ‘பிற கிராமத்துமக்கள் வருகையாலும்  கூட்டம்  நெருக்கடியால் பிதுங்கி வழியுமாம்.பலசரக்கு வியாபாரிகளும் ஆங்காங்கே பொருட்களை கொட்டி வைத்து’புளி’மிளகாய் ‘நவதானியங்கள் : நடந்துகூட  செல்ல முடியாத அளவிற்கு பாதை மறைக்கபட்டு இருக்கும் ஜனநெருக்கடியால் செவ்வாய்கிழமை சந்தை திருவிழாபோல் பேரமளியாக இருக்கும்’ லோடுமேன்கள் முதுகில் மூட்டையை சுமந்தபடி  மனிதர்களை இடித்து தள்ளியவாறே  ஓடிக்கொண்டு இருப்பார்கள்.

ஜபருல்லாஅண்ணன் ஹோட்டலிருந்து OPM bank ( மரக்கடை ) வரை’நடந்து  வந்து சேருவதற்கு 2மணிநேரம் ஆகுமாம்.

செவ்வாய்க்கிழமைகாலை நேரங்களிலிருந்தே சந்தையின் அனைத்து ஹோட்டல்களும் பரபரப்பாக நிறைந்து காணப்படும்.சம்சாவியாபாரி ஜபருல்லாஅண்ணன்  ஹோட்டலும் கூட்டமாவே தென்படும் “மக்கள் வருவதும் போவதுமாக மிகமிகபரபரப்பாக இருக்கும்.வாசலில் சிறிய மாட்டுவண்டிபோல் உள்ள வண்டியில் இரும்பு டிரம்மில் உள்ள  வண்டியின் ‘தண்ணியை கையால் இழுத்துவந்து நிறுத்தி’சைக்கிள் டியூப் வழியாக இரும்பு டின்னில் தண்ணீர் பிடித்து 2கைகளாலும் தூக்கி கொண்டு ஓடி தொட்டியை முழுமை செய்வார்.தொழிலாளி.

ஜபருல்லாஅண்ணணும் கல்லாவில் உட்காரமாட்டார். இங்கிருந்து வெங்காயம் வெட்டுபவர் பக்கம் ஓடுவார் .முயல்குட்டி போன்று 3தடவை அதை பார்ப்பார். அங்கிருந்து லுங்கிகச்சலை அவுத்து  கட்டிகிட்டு டீபட்டறைக்கு ஓடுவார்.  குடிச்ச கிளாஸ்களை தடார்புடார்னு தள்ளிவிட்டு கழுவிபோடுவார் .அங்கிருந்து ஓடி டேபிளில் குடிச்ச டம்ளர்களை சடசடபுடனு எடுப்பார்.  வாழை சருகு இலையோபோடுறதும்” *தடபுடனுகுடிக்க  தண்ணிவைக்கிறதும் ” கல்லாவில் பணம் வாங்கி போடுறப்ப 3கிண்ணங்களும் ‘அதற்குகீழ் யாருக்கோ பயந்து 5’10 பணத்தை ஒழிப்பதுபோல்  இருக்கும் .

தடார்புடார்னுகல்லாவ தொறப்பார்.மூடுவார்  ‘ சம்சாமடிக்கிறதுனு பரபரபரனு படுசுறுசுறுப்பாக இருப்பார். 10 வேலையாட்கள் இருந்தாலும் சர்வரோடு சர்வராக நின்று பரிமாற கூடியவர். இந்த உழைப்புதான் அவர்களை இன்றுவரை சம்சாவிற்கு பிரசித்திபெற்றவர் என்ற  அடையாளத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது.நல்லவியாபாரி இதைபார்த்து கடந்துகொண்டே T junction போனால் TAKM மரைக்காயர் மெடிக்கல்சுவர் ராஜநடை&வெற்றிவிழா பட போஸ்டர்களுடன்
காட்சியளிக்கும். பள்ளிக்கூடம் போகும் மாணாக்கர் 5நிமிடம் நின்று போஸ்டர் ரசிப்பதை காணலாம்.

பெரியபள்ளிவாசல்  சுவற்றிற்கு பின்னாலும்; மரைக்காயர்கடை சுவற்றிற்கு பின்னாலும் செவ்வாய்க்கிழமை அன்று  நொங்குவியாபாரிகள் அய்யாகண்ணு உட்பட 6  பேர். சரசரவெனு வெட்டி தள்ளி அவர்கள் காலுக்கு முன்னால் பச்சைநிற கலர் பனைஓலையை தோகையை போல் விரித்து வைத்தவாறு நொங்குகளை வெட்டி சீவி தள்ளிகொண்டிருப்பார்கள்.

” பொதுமக்கள் பள்ளி மாணாக்கர்  கூட்டம் நொங்கு வியாபாரிகளை கட்டம்கட்டி’ கொண்டு ஈ மாதிரி மொய்ப்பார்கள்.   ‘எனக்கு ‘ஒனக்குனு ‘ சீக்கிரம் தாங்க பெல் அடிச்சிறுவாங்கனு பரப்பாங்க. சிலர் நொங்குசுழைகளை வாங்குவார்கள் 10காசு ‘சிலர் முழுநொங்கையும் 25காசு.

பச்சைஇலையில் ” வெண்மைநிற குவியலாக  குமிந்திருக்கும் சுழையின்  அழகு “பார்க்க 2கண்  பத்தாது .அப்படியே மார்க்கெட் உள்ளே நுழைந்தால் வலதுபுறம் செருப்பு’குடை  தைக்கும் தொழிலாளிகள் 4பேர் அமர்ந்து தைத்து கொண்டுஇருப்பார்கள்.

மூக்கையாஅப்பா பிரபலமானவர் தலையில் முண்டாசு கட்டியவாறே ; யம்மா செருப்பு 8 ரூவாய்க்கு வாங்குறீங்க, எட்டணா கொடுத்து தச்சா கொறஞ்சா போய்ரூவிய என உரிமையுடன் கடிந்து கொள்வார். வாடிக்கையாளரோ 25பைசாவில் பேரம்பேச 35காசு கொடுங்கள் தச்சிவைக்கிறேன் உள்ளே போய் காய்கறி வாங்கிட்டுவாங்க என்ற சத்தம் அதிகாக கேட்கமுடியும்.

அதை கடந்தால் உடுக்கு சத்ததுடன் ஒருவர் உடம்பை சாட்டையால்  அடித்துகொண்டு காலில் சலங்கை சத்ததுடன் வசூலித்து கொண்டிருப்பார்.கரிகடை பசங்க அறுத்து ஆட்டினை தோளினில் சுமக்க முடியாமல் ‘இரத்தமும் ‘நீரும் ‘உடம்பில் வளிந்த நிலையில்  உந்திஉந்தி நடந்து அண்ணன் நவறுங்கண்ண ‘கொஞ்சம் நவறுங்கண்ண என்ற குரல் கேட்கமுடியும் அதோடு சேர்ந்து மார்க்கெட்டின் கீற்றுக்கொட்டகை பந்தல்  மேற்படிப்பில் மரைக்காயர் மெடிக்கல்   அங்கிருந்து தொடங்கி மிக உயரமாக  பர்மாலைன்வரை தொடர்ச்சியாக மொத்த சந்தையையும் கவர் பண்ணி  கீற்றுபந்தலாக சந்தை காட்சியளிக்குமாம்.

அப்படியே இடது புறமாக பளியாகுளத்தின் பின்புறமாக  ஷக்கினியர் ஹோட்டல் ‘ஒளிமுஹம்மது ஹோட்டல் ‘லபேலாஹோட்டல்’நாநாடீகடை’&சேமியா’கரீம்  டீ கடையாம் ‘கோவரசாவாடாகடை ; இந்த அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதுமாம் தரத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்றவர்களாம்.

அப்டியே அடுத்து நம்ம தங்கவேல்அண்ணன் சலூன்கடை ‘அந்த பக்கம் நடந்து போக முடியாது. எங்க ஆள பாக்கவே முடிறதுல என்று அழகாக நலம் விசாரிப்பதை காணலாம் அடுத்ததாக சலூன்கடைய சேர்ந்த இன்னொருவர் UNCLE அவர்கள்
என மொத்த ஊரும் செல்லமாக அழைக்கும். கஸ்டமரிடம் முடிவெட்டும் நேரம் தவிர எந்நேரமும் பீடியை புகைத்து கொண்டிருப்பார்.இந்த இருவரும் கிராப்புகட்டிங்’ ரேம்போ கட்டிங் டிஸ்கோகட்டிங்கிற்கு(2ரூபாய்) பெயரெடுத்தவர்கள்.

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கு முடி இறக்குவதற்கு இவர்களே அழைக்கபடுவார்களாம். சலூன்கடை முழுவதும் கமலஹாசன் படமான  விக்ரம் &நாயகன் படபோஸ்டர்கள் ஒட்டபட்டு இருக்கும். கமல்  ரசிகர் மன்றம் என்ற பெயருடன் ‘

கஃல்ப்லிங்க்வாஹிது அவர்கள்&(மற்றும் பலர் )”நான் நாயக்கர் என சந்தையை வலம் வருவராம்.

அப்டியே எதிர்புறமாக யாஷீன்அப்பா தகரகடை அந்த கடைதான் சந்தைக்கு factory போல் ‘ அடுப்பு எரிவதும் தவரம்வெட்டுவதும் நறுக்குவதும் ‘பழுக்க வைப்பதுமாக பரபரனு இருப்பார் நல்ல உழைப்பாளி.

அவர்கள் கடையில் சைக்கிள்போக்ஸ் கம்பியை வளைத்து Lactodex’Nestam ‘ lactogen போன்ற பால் மாவு டின்களில் செய்யபட்ட டீ மாஸ்டர்கள் பயன்படுத்தும் பெரிய பெரிய புடிகுவளையை தொங்க விட்டுருப்பார்கள் “கூடவே புனலும் தொங்கும். மழைக்காலங்களில் ஓட்டுவீடு’மற்றும் ‘கூரைவூடுகளில் மழைநீர் இறங்கி ஓடுவதற்காக பொருத்தப்படும் நீளமாக செங்கோணவடிவ ‘ அலுமினியதவரங்கள்’செய்யப்பட்டு வாசலில் வைக்கப்பட்டு இருக்கும். பெரும்பாலான நமது;& கிராம வீடுகளில்  இவர்களுடைய இந்த மழைநீர் தவரம் பொறுத்தபட்டு இருக்கும். சிரிச்சி கண்டதில்லை. வேலையிலயே மூழ்கி இருப்பார்கள்.

அப்டியே கரிக்கடை பக்கம் புகுந்தால் ‘ மயில்காரர் என அழைக்க கூடிய SNS காஜாமைதீன் அவர்களின் தந்தை ‘ வெத்திலபாக்கு வாயில் ஓடிக்கொண்டே இருக்கும். நம்ம கரி வாங்க  போனால் வாங்க வாங்க என கூப்பிடும் சத்தம் பெரியபள்ளி சுவர்வளைவு வரை கேட்கும்.   மட்டன் 1 kg 60ரூபாய் .

கரிக்கடையில் பிரசித்தி பெற்றவர்கள்.பெரியோர்கள்  மயில்காரர் ‘கமாலுதீன் ‘மர்க்ககுடும்பத்தினர் ‘சமது’ஆரிபு ‘லியாக்கத்அலி ‘சேட்டு  ஆகியோர்கள்.

அப்டியே கோழிக்கடை பக்கம் திரும்பினால் ‘ முஹம்மது பிரதர்ஸ் ‘கமருதீன் பிரதர்ஸ் ‘நாசர் ‘ராவுத்தர்ஷா ‘பிரபலம். கோழிக்கூண்டுகள் இருக்காது. அதிகாலையில் சைக்கிள் கேரியரில் கம்புகளை கட்டி தலைகீழாக கட்டிதொங்கவிட்டுகொண்டு வெளியில் இருந்து எடுத்து வருவார்கள்.

அப்டியே வந்த வழியே திரும்பி செவ்வாய்க்கிழமை கருவாட்டூ சந்தைக்குள் புகு முன்  நான் எலும்புதுண்டுகளை ‘கவ்விகொண்டும் ‘காக்கா  கொத்தி கொண்டும் ஓடும்.  பலவகையான கருவாடுகள் ‘பெரிய பெரிய மூங்கில் தட்டிகளில் பரத்தி வைக்கபட்டு  கருவாட்டு வாசனையுடன் உள்ளே நுழையலாம் வாசனை   மூக்கை தொலைக்கும்.சைக்கிள் கேரியரில் மீன் பொட்டியை வைத்துகொண்டு நவறுங்க நவறுங்கனு;

அண்ணன் கொஞ்சம் தள்ளுங்க என அதட்டல் சத்ததுடன் ஈரலுங்கியுடன்  அந்த சந்தை நெரிசலில் தள்ளிக்கொண்டு பரபரனு  ஓடுவார்கள்.

அது என்னமோ கருவாடு விற்ககூடிய அனைத்து பாட்டியும் ‘ஒரேவயசாக ‘தினுஷாக ‘எல்லோர் காதிலும் லோலாக்கு தோடுகள் காதுகளை இழுத்துக்கொண்டு தொங்கிகொண்டு இருக்கும்.

சேட்டை புடிச்ச நம்ம ஆளுங்க அவங்களுக்கு புடிச்ச பாட்டிகிட்ட போய் எல்லா கருவாடயும் பொறட்டி பொறட்டி தேடி சில்மிஷம் பண்ணுவாங்க . பாட்டிங்க என்ன கருவாடு தேடுறிங்கனு கேப்பாங்க   எனக்கு ஆம்பள கருவாடு வேணும்,
பொம்ள கருவாடு புடிக்காது” எப்படி அடையாளம் பார்த்து எடுக்குறதுனு கிண்டலா கேப்பாங்க ‘அதுக்கு அவங்க நீங்களே கடலுக்கு போயி அடையாளம் பாத்து புடிச்சிக்கங்க ராவுத்தரேனு பதில் கொடுப்பார்கள்.

அந்த நெரிசலோடு மீன் மார்க்கெட் நுழையும் முன் முகப்பிலயே பண்ணைஹனீபா அவர்கள் இடது காலை தொங்கவிட்டபடி ‘வலதுகாலை    முட்டிதெரியும் அளவிற்கு மடக்கி போட்டு உட்கார்ந்திருப்பார். அந்த முட்டிக்கு கீழே 2ரூபாய் தாழ்களும்’1ரூபாய் தாழ்களும் பறக்காமல் அமைதியாய் இருக்கும். வன்னியர் சுருட்டு புகைத்தபடியே அவர் அமர்ந்திருக்கும் தோரணை’மௌலத் ஓதி சோறு கொடுக்கும் பொழுதும் மிகவும் கம்பீரமாக இருப்பார். இந்த மீன்மார்க்கெட் என்னோடதுனு சொல்லாம கெத்தா உட்கார்ந்து இருப்பாங்க. மீசையை முறுக்கிவிட்டபடியே .

அரசமரத்து சலசலனு காற்றுடன் அதுவும் ஏலம் விடூம்பொழுது கேட்கும் அந்த கம்பீரகுரல் இன்னும்  பலரது காதில் ஒலித்துகொண்டு இருக்கின்றன. எம்பது ‘எம்பது’எம்பது தொண்ணூறுனு இறுதியாய் முடிப்பார்.ஒருவழியாய் கூட்டம் வேடிக்கை பார்த்துக் விட்டு மீன் மார்க்கெட் உள்ளே புகும்.

பிரபலமான மீன் வியாபாரிகள் பெரியோர்கள் ‘ சாத்தையன் சிங் ஷேக்தாவூது சுலைமான் இபுராஹீம் மஜிது ஜாஹிர்அவர்களின் தந்தை” போன்றோர்.

ஜனநெரிசலில் இடித்து கொண்டு உள்ளே போனால் முகப்பில் ‘கோரபாயில் தேசபொடிகள் குவியலாக கொட்டி கிடக்கும். மக்கள் 2ரூபாய்க்கும் 3’ரூபாய்க்கும் போட்டிக்போட்டுக்கொண்டு வாங்குவார்கள். மீன் மார்க்கெட் சிமெண்ட் தரையில் விறால்மீனு ‘ வாலமீனு ‘ பண்ணா பூவாலி ‘கெளுத்தி’கொறபொடி ,அஞ்சலா என கடைசிசெவரு  சிமெண்ட் தரை வரையிலும் மீன்கள் குவியல்குவியலாக ப்ரெஷ்ஷாக காட்சியளித்திடும் பார்ப்பதற்கு அந்த அழகு எக்கசக்கமாக இருக்கும். மீன்களின் மீது தண்ணீர் தெளித்து கொண்டே இருப்பார்கள். அந்த தண்ணீர்  ‘நமது கால்பகுதியில் கவுச்சி வாடையுடன் ‘நதிபோல் பளியாகுளம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்.இன்னொரு புறம் அடிபைப்பிலிருந்து தடார்புடார்னு’ஒருவர் மாத்தி ஒருவர் தண்ணீர் அடித்து கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வியாபாரிகளிடம்’பிடித்த மீனை வாங்கிகொண்டு சென்று கொண்டிருப்பார்கள்.

பனைஓலையில் செய்யபட்ட  உம்மல்பொட்டியுடன் .1ரூபாய் ‘re use பண்ணிகொள்ளகூடியது) யாரயாவது ஒருவர் மீனை பார்த்துவிட்டு பிடிக்காமல்  திரும்பினால் போதும் அவ்வளவுதான் ‘ வலுக்கட்டாயமாக அவர் கையபுடிச்சி எல்லா மீன்களின் கண்ணங்களையும்’எடுத்து எடுத்து பிதுக்கிபிதுக்கிகாட்டி இதுல உங்களுக்கு எது புடிக்கலனு உரிமையுடன் கோபிப்பார்கள்.காசு எவ்வளவு  என்று நாம் கேட்டால் ஒங்கள்ட்ட நான் காசு கேட்டேனா ‘ கேட்டனா சமைச்சி சாப்டுங்க போங்க என்ற குரல் அதிகமாக ஒலிக்கும். இந்த வார்த்தைகள் அனைத்து இறைச்சி வியாபாரிடமும் ‘தொடர்ச்சியாக காணப்படும் ம( த ) ந்திரசொல் .

அப்டியே மீனை வாங்கிட்டு’ஜனநெரிசலை கடந்து  வெண்டைக்காய் வாங்க இறங்கினால் வெயில் மண்டயபொழக்கும்.
வெயிலுக்காக சணல்களால் 4புறமும்  கட்டபட்ட சாக்குபந்தலுடன் காய்கறி சந்தை தொடங்கும். இடதுபுறம் காய்கறிகள் கூறுகட்டி விற்கும் வியாபாரிகள் 3பேர் இருப்பார்கள்.

அக்காஉமாராணி ,செல்வம்அண்ணன் , சூனியகாரகிழவி( கொடுக்காபுளிக்கு )பேமஸ் சகபள்ளி மாணவிகள் இந்த்பேரை சொல்லித்தான் கிண்டலடிப்பார்கள்.

எதிர்புறம் முருகையண்ணன் கடை ‘2 வாழைக்காய் தார் செழிப்பா தொங்கி கொண்டே இருக்கும். பக்கத்துல தேங்காய் வியாபாரி ‘அதன் பக்கத்துல தேங்காய்கீத்து 10காசு’ பிளாச்சொலைகளை அறுத்து  கள்ளிபொட்டியை குப்புற படுக்க வைத்து ‘ அதன் மேல் அடுக்கி கொண்டே இருப்பார்.  பிலாக்கொட்டைகளை தனியாக கூறுகட்டி விற்பார்.எந்த நேரமும் பலாப்பழத்துடனயே கட்டிபுடிச்சி  உருளுவார். தூக்குவார் ‘மோந்துபாப்பார் ‘அறுத்துபோட்டுட்டு சதைகளை ஓரமாக அட்டிபோட்டு அடுக்குவார் மாட்டுக்காக. நாமும் ஸ்கூல் இடைவெளியில் அதனை ருசித்து பார்க்க தவறியதும் இல்லை. பலாப்பழ வியாபாரி அண்ணன் ஷேமொம்மது ‘ஜாமான்வாங்க சேதி கேட்டால் முதலில் புன்சிரிப்பையே பதிலாக தருவார். கட்டம் போட்ட மலேசிய வகை லுங்கியை அதிகம் உடுத்துவார்.

மீன் வாங்கிய பல மக்களும் அனைத்து கடைகளிலும்  வெண்டைக்காய் ஊடைத்து பார்த்து வாங்கிகிட்டு இருக்கும் போது பரபரனு 2கையிலயும் தூக்குகம்பியுடன்  டீ கொண்டு வரும்  டீக்கடை’ ஊழியர்கள் நாடி  ‘ கொடுக்கு ஜெய்லான்’ அத்தா ச்சி’ஊக்குறி அன்சாரி ‘நஜீர் ‘ கடைகளில் சீக்கிரம் எடுங்க எடுங்க ம் ம் என்ற சத்தம் இறைச்சலின் நடுவே கேட்க முடியும். மஞ்சள்கலர் சிகரெட் பொட்டியில் ‘ கணக்கு எழுதிய கோடுகள் ‘ஒரு கடையின் டீகிளாஸ்களை இன்னொருவர் மாத்தி எடுத்துகிட்டு போயிட்டா ‘அந்த பரபரனு நடக்குற மார்க்கெட் நடுவுலயும் இந்த டீகடை பசங்க சண்டை நடக்கும்.

கடைகளுக்கு தண்ணீர் சப்ளை குடங்களுக்கு 1 ரூபாய் தூக்கி வரும் பெரமையன் அம்மா முகம்’ பல சோக கதைகள் சொல்லும் .

அப்டியே இடதுபுறம் அண்ணன்  கலைச்செல்வம் மளிகைகடை லேசான அதட்டலான குரலில் தான் வியாபாரம் செய்வார்.
அரிசி 1 கிலோ 1.60காசுக்கு  வாங்கிய  ஞாபகம்.

மளிகைகடை அணணன்தாஜ் ‘எதிர்புறம் சுக்குர் அப்பா மளிகைகடை ‘இந்த 2 கடையும் வெள்ளி ‘திங்கள் பாத்திஹா ஓதும்’சீனி’சக்கரை’பத்தி’ வியாபாரம் சிறப்பு.

அடுத்து ஒரு பூக்கடை 4பேரும் எந்த நேரமும் மாலைகளை கட்டிகொண்டு இருப்பார்கள்.

சரிபுவாவா கடை ஐஸ்மோர்க்கு பெயரெடுத்த சர்பத் கடை ”கடையில வேலை பார்த்த ரகுமத்துல்லா என்பவர் மேல் வாவா மிகவும் நேசமாக இருப்பார்.

சதாசிவம்அண்ணன் கையில கட்டுன  மாலையை  போட்டு தான் பெரும்பாலான  இஸ்லாமிய மாப்பிள்ளை “பொண்ணு கழுத்துல விழும் கல்யாணம் நடக்கும்.  பண்ணாதவங்க  யாரும்  இருக்க மாட்டாங்க.பண்டாரி காதர் அண்ணன் ஹாஜா வாழைமட்டையில் நாறு பிரிப்பார்கள்.பூ கட்டுவதற்கு பக்கத்துல பச்ச துண்டோட அண்ணன் மொவனேனு நெட்டபாய்சுல்தான் அவர்கள் படுத்து கெடப்பார் ESM சவுண்ட் சர்வீஸ் அப்பா ஸ்கூட்டரில் வரும் பொழுது அழகாக இருக்கும் கழுத்தில் ஒரு  சிறுதுண்டுடன் வலம் வருவார்கள் .கடைகளில் மைக்டெஸ்ட்டிங் மைக்டெஸ்டிங்னு செல்லப்பா சரிசெய்து கொண்டே இருப்பார் அனைத்து கிராமத்திற்கும் ‘திருவிழா ‘நல்லது கெட்டது என அனைத்து விசேசத்திற்கும் இந்த கடை மைக்செட்தான் அப்டியே return காய்கறி கடை வந்தால்  வியாபாரிகள் ‘கணக்கபுள்ளகடை’சித்திக்’ ஆனந்த் ‘முருகையன் ‘சக்கரை’ரவி’ரகுமத்துல்லா ‘காசியப்பா ‘சாகுல்  ‘பக்கிர்’ஷேக்’ பிரபலமானவர்கள் கைப்புள்ளைகள் ராஜ்குமார் ‘நத்தர்ஷா ‘ஷேக்தாவூது’அக்பர்  ‘நிஜாம் வலம் வருவார்கள்.

பிற்காலத்தில் பண்டாரிகளாகவும் வலம் வந்தனர்.

அப்டியே வாழைஇலைகடை பக்கத்தில் இன்சூரன்ஸ் நடராஜன் அவர்கள் உயரமான வரிசையில் 4முட்டை தட்டுகளுடன் வைரமுத்து போல் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பார். பின்னாடி அலாவுதீன் அண்ணன் காய்கறிகடை எந்த நேரமும் பிஸி தான் .வாய்ல புகையிலை போட்டு உறுட்டி துப்பிகிட்டே இருப்பாங்க. கடையசுத்தி முட்டைகள் அடுக்கி இருக்கும். அவங்க எல்லாபசங்களுக்கும் பொறுப்புடன் வியாபாரத்தை கற்றுகொடுப்பார். இவர் மட்டும் அல்ல அனைத்து மார்க்கெட்  வியாபாரிகளும் தங்களுடைய பசங்களுக்கு வியாபாரத்தை கற்றுகொடுப்பதில் மும்முரமாக இருப்பார்கள்.

அப்டியே சங்கத்து வாசலில் மறுவள்ளிகிழங்கு வியாபாரிகள். பெரியோர்கள் யாக்கூப் ‘ பக்கிர்மஸ்தான் ‘ அமானுல்லா ‘ துல்கருணை ‘வைக்கோல் போர் மாதிரி குமிந்திருக்கும் கிழங்குகளை இரும்பு தராசில் மாறிமாறி எடைக்கற்களை எடைபோட தூக்கி போடுற சத்தம் சூப்பர். வியாபார காசுகளை சாக்கை நான்காக மடித்து போட்டு சாக்கின் வாய்பகுதியினை கல்லாபொட்டிபோல் பயன்படுத்துவது அறிவின் உச்சம்.

அப்டியே எதிர்புறம் 7ம்நம்பர் சமது அவர்களின்  மளிகைகடையாம். மூனமூனாபாரூக் இரும்புகடை  பிற்பகுதியில் செல்வநாயகம் அவர்களிடம் விற்கபட்டு விட்டதாம்.கோவண்ணா மளிகைகடையடுத்து ‘மக்கள்ஸ்டோர் யூசுப் கடை

அப்டியே அனைத்து  டைலர் கடைகளிலும்  சக்கரம் தடதடதடனு ஓடிக்கிட்டு இருக்கும் ‘டக்குபுடிச்சி கொடுங்க’கழுத்த இழுத்துவைங்க ‘கைய நீளமா வைங்க என்ற பெண்களின் சப்தத்தை காதில் வாங்கிகொண்டே மணிக்கடைகள் பக்கம் போகலாம். இடையில் கூறுகட்டி காய்கறி விற்பனை செய்யும் ‘பெரியோர்கள் முஸ்தபா ‘ அஜிஸ் ‘ மொம்காஷின் ‘ சாரதம்மா ‘ மொக்காஷின் அத்தா காணப்படுவார்கள்.கத்தி சானம் தீட்டுபவரும் புளியமரத்தடியில் தன் பங்குக்கு இரைச்சலை கொடுத்து கொண்டிருப்பாரசெவ்வாய்க்கிழமை சந்தைக்கு மணிக்கடைபெரியோர்கள் .

மஹாராஜாக்கள் ரஹீம் ( குட்டிபாம்புஅத்தா ), மீராசாவாவா ( gulflinkvahid அத்தா), அண்ணன் அல்லாபிச்சைட்ட காசு யாராவது கொறச்சி  கொடுத்தால்  என்ன யாவாரம் ‘கட்டுபடுஆகாதே  இது நீங்களே வச்சிக்கங்க என்பார்கள்.

அடுத்து  சாதிக்அண்ணன்” ‘ராவுத்தர்ஷா அத்தாகடை செவ்வாய்க்கிழமை வியாபாரத்தால்” கடை மக்களால் திணறிகொண்டுஇருக்கும் .

வெல்டிங்பட்டறைல பத்தவைக்கும் நெருப்பு போல் சாதிக்அத்தா பேச்சு பொறியும்’ அந்த பேச்சு கஸ்டமரை கவரும் விதமாகவும் இருக்கும்.  கஸ்டமரின் இயல்புகேற்ப  பேசகூடியவர். பைத்தியம் மல்லிகாஅக்கா அடிக்கடி இவங்கள்ட வந்து சிரிச்சுகிட்டே காசு கொடுமாமானு கேக்கும் .என்னா பொழுதா பொழுதனைக்கும் காசு ஏன் ஒனக்கு அதட்டிகிட்டே காசு கொடுத்து ஆறுதல் அளிப்பார்கள் பல வியாபாரிகளிலும் ” குழந்தை கள்நடவண்டி’தேன் ஊட்டி’முட்டைகிளாஸ் ‘மஞ்சள் ‘தாலினு ‘பொட்டுனு வியாபாரம் அனல் தெறிக்கும்.

அல்லாபிச்சை அண்ணன் சாதுர்யமான வியாபாரி  கடையில ஷேக்பரீது பொட்டிபாம்பா அடங்கி ஒக்காந்திருப்பான் .

வாவா மிகமிக நிசப்தமானவியாபாரி சிலநேரங்களில் மணிக்கடையில ஜாமான் வாங்கியபிறகு சரியான காசை கொடுக்கமாட்டார்கள். பேரம் நடக்கும். கட்டதும்மா’5ரூபாய் சேத்து கொடுங்கமானு ‘பல தடவை கேட்டபிறகு ஒருவழியா கிடைக்கும்.  வாங்கிய பிறகு என்னைக்குமே நீ என்கிட்ட கிராக்கி பண்ணமாட்ட இன்னைக்கு இப்டி பண்ணிட்டனு சொல்லி எனக்கு லாபம் வேணாம் இந்தா வச்சிக்கனு சொல்லி 5ரூபாயிலிருந்து 2ரூபாயை திரும்ப கொடுத்துட்டூ  டீகுடிச்சிட்டு போமானு கொடுப்பாங்க பெரும்பாலான வியாபாரிகளின் தாரகமந்திரம் இதுதான் சந்தைமுழுவதும் இது போன்ற குரல் ஒலித்துகொண்டே இருக்கும். ‘ மனதை காயபடுத்தாமல் வியாபாரம் செய்யும்  பக்குவம் திறன் கொண்டவர்கள்.

அதிலும் PTS மளிகை பின்புறமாக சர்புதீன்அண்ணன் ஜவுளிகடை தலைய தடவிகிட்டே தங்கச்சி கட்டதுமா ‘கட்டதுமா என பரிவாக கேட்பார்கள்.

தள்ளுவண்டி சேமியாகஞ்சி, 50காசு சுல்தான்ராவுத்தர், TNTJ ரகுமத்துல்லா தந்தை குறுக்கு நடுக்குமா ஓடுவார்  செருப்ப  தேச்சிகிட்டே அடுத்ததாக வெற்றிலை வியாபாரம் பிரபலமானவர்கள்.  பெரியோர்கள்.

அப்துல்உசேன் ( காத்துனம்மா )மூத்த மகனார் ஜமால் அவர்கள்தந்தை ஆரிபு ‘அப்பா உருட்டிவீட்டு அமீர்மைதீன்அப்பா
ஊதாகலர்அரைசைக்கிளில் வருவார்.  & அண்ணன்  கலீல்ரஹ்மான் (கருப்பு பேக்)கம்புகட்டுல இருந்து கொண்டே இருக்கும். இவர்களுடன் சேட் என்னும் தொழிலாளி நீண்ட வருடம்  வேலை பார்த்து இருக்கிறார்களாம்.

வெற்றிலைகளை’பரத்தி மலர்ந்து விரிந்த நிலையில் காணப்படும் காட்சி கண்கொள்ளாதது.

ரவூப் அண்ணன் மளிகைகடை யோட ஒரு மணிக்கடை ‘பக்கத்துல கயித்துகடை சபிஅப்பா அடிக்கடி ஜாஹிர் ‘அடேய் ஜாகிரு என உடம்பை உலுக்கிகிட்டு சத்தம் போடுறப்ப ‘பக்கத்து கடைல ஊர்கதை பேசிகிட்டுருக்க ஜாகிரும்’ராஜாகிளியும் கச்சகட்டிகிட்டு  விழுந்தடிச்சி ஓடுவாங்க.உப்புமரைக்காயர் கடையோட ஹைலட் அடுத்து தங்கவிலாஸ் புகையிலை வியாபாரி அப்துல்வஹாப் அவர்கள் “இந்த வியாபாரம் மிகமிக திறம்பட செய்தவர்களாம் ‘சிறுவியாபாரி’பெறுவியாபாரி  என எல்லோரும் இங்கேதான் வாங்குவார்களாம். இந்த  வியாபாரத்தில்  சிறந்து  விளங்கியதால் இவர்கள் குடும்பம் இன்றுவரை தங்கவிலாஸ் குடும்பம் என  அழைக்கப்படுகிறதாம்.

பழக்கடை வியாபாரிகள் காடைபழகடை சாகுல்ஹமீது பழகடை பிரபல்யமாம் 80ஸ்களில் விஸ்வம் ‘அவங்க அப்பா ‘அப்துல்லா அண்ணன் ‘போன்றோர்கள் வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்கும் தலைசிறந்த வியாபாரிகள்.

உலாவருவார் மானாசேனாஷாகுல்ஹமீது அவர்கள் ‘ வெள்ளதொப்பி எனக்குமட்டும் தான் சொந்தம் என்ற தோரணை’ நடந்து தான்  அதிகமாக போவார்கள். மிகமிக  பரிவுத்தன்மையுடன் பேசுவார்கள்.

ரோஜாப்பூ’ஜெஹபர்அலி லண்டன்ஸ்டோர்கரீம் மதினாஸ்டோர்அமானுல்லா பாடகர்அமானுல்லா ஆகியோர்  இரு தொழில்களிலும் கெட்டிக்காரர்களாக விளங்கியவர்கள்.

நடராஜன் ‘ ஜபருல்லா’நோகரீம் ‘ இப்ராஹிம் Skm சபிஅண்ணன்   என பலர் சிறந்த வியாபாரிகள்.

அப்டியே MSAமில்லு சந்துலேந்து MSAகுத்தூசியுடன் வண்டியில் உள்ள நெல் மூட்டைகளை குத்திகுத்தி உறுவி உறுவி பாப்பார்கள் .

லோடுமேன்ட்ட இறக்க சொல்வோமா ‘திருப்பி அனுப்பிவுட்றுவாமோனு மைண்ட்ஸ்வாய்ஸ் சொல்லும் . இன்றுவரை  தொழிலில் கவனமானவர்.

அந்த இடத்தில்’சற்று தள்ளி  ANMமளிகைகடையும்.எதிர்புறம் ஹாஜா த்அவர்களின் படக்கடையும் இருந்தது.

அடுத்ததாகப் பெரியோர்கள்  யாக்கூப் & இஷாக் பாக்குகடை  ASMபாக்குகடை மிக பிரபலம்: எட்டணாக்கு பொடி வாங்குனா காக்கி பேப்பர்ல ,காதுகொடையும் கம்பிபோல் நீளமாக இருக்கும்.அதுல 6கரண்டி மடிச்சி கொடுப்பாங்க.

செட்டியார்கடை’ முருகேஷன் அண்ணன்.படுபிஸியான நிறுவனம் சில நேரங்களில் சட்டைய கழட்டிபோட்டுட்டு ரோக்காக்களை வாசிக்க’ தொழிலாளி ‘ எடுத்து வைக்க’ ரெங்கவிலாஸ்5 ‘ தங்கவிலாஸ்*  *குளவி5 ,
நிஜாம்10 ‘ AR5 ‘ ஐடியல் 5 ஒட்டகம் 5 சீயக்காய் 5’  lifebuoy 5கங்கா 5னு கடை பிஸியா ஓடிகிட்டு இருக்கும்.அடுத்ததாக *குருசாமி அவர்கள் நிசப்தமானவர்  பெட்டிக்கடையின் முன்னால்  தொங்கும் பால்கோவா ‘பம்பரமிட்டாய் ‘கல்கோனா’சூடமிட்டாய் கடைக்கு அழகு சேர்க்கும்.

தீபாவளி நேரத்தில் இந்த ஏரியா வியாபாரிகள் ‘கட்டம் கட்டிவெடிவியாபாரத்தில் கலக்குவார்கள்.

மூட்டைபூச்சிஆலிம்ஷா கடையிலும் ‘எதிர்கடை செட்டியார் கடையிலும் குறைந்தது வெடி வியாபாரத்திற்காக 10மேற்பட்ட தொழிலாளிகள் இருப்பார்கள்.

செட்டியார் அவர்கள் இங்கு புகைபிடிக்காதீர்கள் என்று போர்டு வைப்பாராம். ஆலிம்ஷா ஓடிச்சென்று அந்த போர்டை கழட்டிகொண்டு வந்திடுவாராம் ‘செட்டியார் சிறிய கோபமாக ஏங்க கலட்டுனீங்கனு கேட்டா;நம்ம ரெண்டுபேர கடைவெடி என்னைக்குங்க வெடிச்சிருக்கு என சொல்ல” செட்டியார் தலைல கைய வச்சுகிட்டு இவர வச்சுகிட்டு மிச்ச பொழுது எப்டி போக போதுனு தெரியலயேனு முறைப்பாராம். அப்டியே ஆலிம்ஷாக்கு அவர் ரசனைக்குஏற்ப பேச   துணைக்கு ஆளு கிடைத்து விட்டால் போதும். இடதுகையால் தாடிநீவிகிட்டே மாடிகுட்டி போட்டசேதி முதல்  அந்த கிராமத்தோட முழு இராணுவ ரகசியம் எல்லாம் பேச்சிலயே வாங்கும் வல்லமைகொண்டவர்.நானும் SSBசக்கரபாணி செட்டியாரும் ஒரே நேரத்தில் இந்த நவதானியவியாபாரம் ஆரம்பிச்சோம். அவரு வடுகன்குத்தகைவரைக்கும் சுவர் எடுத்துட்டாரு ‘நான் இன்னும் என் கடைதரைக்கு சிமெண்ட் போட முடியலனு SSBகுடும்பத்தாரின்  வியாபார திறமையை நகைச்சுவையாக பாராட்டுவாராம்.

அடுத்ததாக தம்பிமரைக்காயர் லாட்டரி கடை எந்த நேரமும் கடைக்கு 10 வியாபாரிகள் வருவதும் போவதுமாக  படுபிஸியான வியாபாரி ‘காலை நேரங்களில் 7 to 9 மார்க்கெட் ”லாட்டரியை வைத்து கொண்டு அதிர்ஷ்டம் நாளிதழில் ரிசல்ட் பார்ப்பது’

கடை வாசலில் ‘மக்கள் மரைக்கா KAS ராமதாஸூடைய  19 இருக்கா’46 இருக்கா ’72இருக்கா அது இருந்தால் நாளைக்கு லாட்சதிபதி’நீ கோடீஸ்வரன் குரல்கள் ஒலித்துகொண்டே இருக்கும்.

Starசெருப்பு கடை ‘குடைகடை’படக்கடை ‘வெடிகடை என பலவிதமான வியாபாரம் செய்யக்கூடிய பலமுகம் கொண்டவர் .அழகிய  பொடிநடைக்கு சொந்தக்காரர்.

எதிர்புறமாக ஜெயராம் அண்ணன்  மளிகைகடை.சந்தையை மையம்  கொண்ட   டைலர்கள்  படப்பைகாடுஜோசப்டைலர்
பாலுடைலர் ஹைகிளாஸ்டைலர் குஞ்சு ” உத்திராபதி ராஜேந்திரன்

80ஸ்களில்சிறந்துவிளங்கிய ஜவுளிகடைகள்: கஸ்தூரிஜவுளிஸ்டோர் , நம்நாடுசில்க்ஸ் , சோழநாடு சில்க்ஸ், VOM ஜவுளிஸ்டோர் ,  தனபால்ஜவுளிஸ்டோர் ,காதர்ரெடிமேட், பஷீர்ரெடிமேட்,சுல்தான்ரெடிமேட் , யூனுஸ்ஜவுளிஸ்டோர்,
ஜலால்ஜவுளிஸ்டோர், சுமங்கலிஜவுளிஸ்டோர் .

பிரபலமான வியாபாரிகள் : VOM மளிகை, பாண்டுரங்கன்மளிகை ,ANMமளிகை , ரஹீம் மளிகை , உதயம்மளிகை , நாட்டுமருந்துகடை யாக்கூப் , ராமையாபிள்ளை ஹோட்டல், கவிதா ஜூவல்லரி , இஸ்ஹாக் &கோ இரும்புவியாபாரம்,
போன்றவையாம்.

பெரும்பாலும் கிராம மக்கள் வாரவாரம் , செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வழக்கமாக வருகைதர கூடியவர்கள்’SSB யில் பருத்திகொட்டை ‘புண்ணாக்கு’தவுடு’ காய்கறிகள்  ‘கோழிகள் இன்னும் பிற பொருட்கள் வாரவாரம்  வழமையாக வாங்கும் பழக்கம் உள்ளவர்கள்.

இதில் பொங்கல் தீபாவளி  பண்டிகை காலங்கள் சேர்ந்து வந்தால் வியாபாரிகள் கலங்கிபோய்விடுவார்களாம் .

சிவக்கொல்லை வரை மாட்டுவண்டிகள் நிறுத்தபட்டு இருக்குமாம்.

அதிகாலையிலேயே கட்டம் கட்டி மதுக்கூரை நோக்கி  சாரசாரயாக மாட்டுவண்டிகள் அரிக்கண்விளக்குகளை தொங்கவிட்டபடி வருமாம்.

ஒரு மாட்டுவண்டி ரோட்டில் வந்தால் “பஸ்  டிரைவருக்கு ராஜ்கலா ‘ 8ம்நம்பர்  சைடு போடுவது பெரும் போராட்டாமாக இருக்கும். கண்டக்டர் விசில் ஊதியே செத்துருவார். ரோடின் இருபுறமும்’கீற்றுக்கட்டுகள்  அடுக்கபட்டு கெடக்கும். கீற்றுசந்தை வரை கம்புகடை & விறகு தொழிலில்பெரியோர்கள்  செல்வநாயகம் பாரியத்தா பெயர் பெற்றவர்கள்.

கீற்றுவியாபாரத்தில் அனைத்து ஊர் மக்களிடத்திலும் பெயரெடுத்த வியாபாரிகளாம் பெரியோர்கள்  அபூபைதாஅப்பா அவர்களும் ‘ முஹம்மதுசாலிஹ் அவர்களும்.

தர்கா அரசமரத்தடி வாசலில் : சட்டிபானை ‘ பிருமணைகள் ,’நீளஆப்பைகள்’, மஞ்சள்கொத்துசெடிகள் , வண்ணபொடிகள் ‘ மாட்டுமாலைகள் , கோழிகவுத்தும் கூடைகள் ‘கோழிகள் கரும்புகள் ‘ குவியலாகமிளகாய் சந்தை நெருவுளி ஆகும். இடையிடையே கூண்டிலிருந்து புறாக்கள் உறுமுவதும்’ திடீர்னு  சிறகைவிரித்துபறப்பது சந்தைக்கு மேலும் அழகாக இருக்கும்.

மொத்தத்தில் மதுக்கூர்சந்தை,  தூங்காநகரம் போல் காட்சியளிக்குமாம் .

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR