ஜூன் மாதம் வந்தது.
நமதூரின் இயல்பு வாழ்க்கையும் திரும்புகிறது.
ஆமாங்க.
முதல் தேதி முதல் சாலைகளில் அரசு பேருந்துகள் செல்கிறது.
உணவங்கள் திறக்கப்பட்டன.
கடைகள் வழக்கம்போல திறந்து இருக்கின்றன.
தேனீர் கடைகள் திறந்து இருக்கின்றன.
செவ்வாய்கிழமை சந்தை நேற்று மிக நெரிசலான கூட்டம் காணப்பட்டது .
நாம் கூட (volunteers) தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு , அதன் நிலையை சொன்னோம்.
அந்த அளவுக்கு ஜனக்கூட்டம். தொற்று நோய் பரவக்கூடிய காலக்கட்டத்தில்
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இதுபோல கூட்டம் கூடுவது நல்லது அல்ல.
இறைவன் நமதூரில் தொற்று நோய் பரவாமல் பாதுகாப்பானாக!
பேருந்துகளில் அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.
கிராமங்களுக்கு பேருந்துகள் செல்கிறதா எனத் தெரியவில்லை?!
மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.
மார்ச் 20 ந்தேதி முதல் முடங்கிய மதுக்கூர்
இப்போது இறைவனின் கிருபையால் சகஜ நிலைக்கு வருகிறது.
இன்னும் எதிர்பார்ப்புகள்
வழிபாட்டு தலங்கள்
சுபகாரியங்கள் , விருந்தோம்பல்கள், திருமண மண்டபங்கள்…
இந்த தொற்று நோய் இந்த உலகை விரைவில் ஒழிய
எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்வோம்.
அதுவரை சமூக இடைவெளியை கடைபிடிப்போம்.