கடந்த வருடம் இதே போல வெள்ளிக்கிழமை நம்மை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி நமது ஊரில் உள்ள அனைத்து மரங்களையும் வீழ்த்தி நம்மை பயப்படுத்தி சென்ற கஜா புயல் நமது ஊரில் வீசி சுமார் ஓராண்டுகள் ஆகிவிட்டது. அந்த புயல் வீசும் வரை நமக்கு யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு காற்று சுழற்றி அடிக்கும் என, இப்படி மரங்கள் வீழும் என, இப்படி நமது ஊர் அலங்கோலமாய் இருக்கும் என…, பலரது வீடுகள் பாதிக்கும் என.., நமது ஊரில் உள்ள பாடசாலைகள் சேதமடையும் என.., இறைவன் போதுமானவன்.
அப்பா நினைத்தாலே….
விடிய விடிய சுழற்றி அடித்த பல வீடுகளில் ஜன்னல்களில் மோதியது. பலரது வீடுகளில் கூரைகளை அடித்துச் சென்றது. விடிந்ததும் அக்கம் பக்கத்து வீடுகளை விசாரித்துக் கொண்டோம். சொந்தங்களை பார்த்தோம். நமது ஊர் 30 வருடம் பின்னோக்கிச் சென்றது. தொலைபேசி, அலைபேசி, இனைய சேவை, தண்ணீர் , மின்சாரம் எதுவும் கிடையாது. குளியல் எல்லாம் ஆறு, குளம், ஏரி தான். சமையல் எல்லாம் சாதாரனம் தான். மண்டபஙகளில் சமைத்து ஊருக்கும், கிராமங்களுக்கும் வழங்கப்பட்டது.
உணவு மட்டுமல்ல, உடை , விளக்குகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வைகள், பதினைந்து தினங்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், அரிசி , காய்கறிகள், பால், என ஜாதி மதம் பாரமல் மனித நேய உதவிகள் தமது ஊரார்க்கு உறவுகளுக்கு இரவு பகல் பாரமல் கொடுத்தனர்.
இதுவரை கேள்விபடாத கிராமங்களுக்கும் எல்லாம் மனித நேய உதவிகள்
சென்றது.
தண்ணீர் வைத்து இருப்பவர்கள் தண்ணீர் கொடுத்தார்கள்.
ஜெனரேட்டர் மூலம் மின்சாரம், தண்ணீர் வழங்கப்பட்டது.
ஊரில் விளக்குகளே இல்லை. தொலைக்காட்சி பெட்டி இல்லை. வெளி உலகில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. மக்கள் 22 நாட்கள் இந்த கஷ்டங்களை சிரமம் பாராமல் அனுபவித்தனர்.
22 நாட்களுக்கு பின் மின்சாரம் வந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பியது. இன்னும் புயலில் சாய்ந்த மரங்கள் பலரது வீடுகளில் தோப்புகளில் எடுக்கவில்லை.
இறைவன் நாம் செய்த பாவங்களை மன்னித்துக் கொண்டு
இது போல ஒரு புயலை நமது ஊருக்கு தராமல் நம் அனைவருக்கும் நல் வாழ்வை தருவானாக! ஆமீன்.