Magazine பொது செய்தி - General

குடியரசு நாள் சிறப்பு : “ஒற்றுமைக்காக ஒன்றினைவோம்”

சமூக ஊடகங்களில் தற்போது…..

மதுக்கூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்களின் கூட்டமைப்பு நடத்திய 71வது குடியரசு தின விழா *ஒற்றுமைக்காக ஒன்றினைவோம்* நிகழ்ச்சி இன்று காலை 9:30 மணிக்கு மெயின் ரோடு லக்கி ஹார்டுவேர்ஸ் *காயிதேமில்லத் திடலில்* குடியரசு தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் சுதந்திர போராட்ட தியாயகிகளின் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.

ஜாமிய மஸ்ஜித் பரிபாலனக் கமிட்டி, மதுக்கூர் தவ்ஹீத் தர்ம் அறக்கட்டளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,மதுக்கூர் இளைஞர்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சகோதரர் ஃபவாஸ்கான் தலைமை தாங்கினார், சகோதரர் பசூல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து தேசிய கொடியினை வெஸ்டர்ன் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் முகமது இசாக் அவர்கள் ஏற்றினார். அதனை தொடர்ந்து ஒற்றுமை கீதம் போடப்பட்டது.

மக்களாட்சி குடியரசு அமைக்கவும், நாட்டின் அமைதியும் இறையான்மையும் காக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது உறுதி மொழியினை சகோதரர் அசாருதீன் அவர்கள் அறிவித்தார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அபுசாலிஹ் அவர்கள் பேசிய போது, சுதந்திர போராட்டத்தின் போது ஒன்றுபட்ட சமூகம், தற்போது அந்த ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்தி பேசினார். சகோதரர் சேக் அஜ்மல் அவர்கள் பேசிய போது, குடியுரிமை போராட்டங்களில் தொடர்ந்து ஒன்றுப்பட்டு நிற்கவேண்டும்,மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நாம் அறிய வேண்டும், நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும், இந்தியா நாட்டின் சுதந்திரத்தில் நம்முடைய தியாகத்தையும் பங்களிப்பையும் எல்லோருக்கும் எடுத்து செல்ல வேண்டும் என எடுத்துரைத்தார். சகோ.அப்துல் மாலிக் அவர்கள் நன்றியுரை கூறினார்.

இறுதியாக தேசிய கீதம் பாடியும், துவாவும் ஓதி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள், குழந்தைகள், தாய்மார்கள்   என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே

கருத்து தெரிவியுங்கள்