ஆரோக்கியமான ஆண் & பெண் குழந்தைகள் வளர்ச்சியை கண்டறியும் முகாமை துவக்கி வைத்தார் 8வது வார்டு உறுப்பினர் சகானா Er.இலியாஸ் அவர்கள்
இன்று 22/03/22 மதுக்கூர் சந்தை பள்ளி அருகே உள்ளே முகமதியார் குழந்தை மையத்தில், ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் போஷன் அபியான், ஆரோக்கியமான ஆண் & பெண் குழந்தைகள் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமினை மனிதநேய மக்கள் கட்சியின் மதுக்கூர் 8வது வார்டு உறுப்பினர் சகானா Er. இலியாஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.






இந்த முகாமானது இன்று முதல் 27/03/22 வரை நடைபெற இருக்கிறது, பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் நல்ல ஆரோக்கியத்தின் மதிப்பை மேம்படுத்துவதற்காக நடைபெறும் இம்முகாமினை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
முகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு Er.இலியாஸ் அவர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.
மேலும் இந்த நிகழ்வில் தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் கான், தமுமுக மூத்த நிர்வாகி முஜிபுர ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி ஊடக அணி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.